Advertisment

வரதட்சணை முறை "அசிங்கமான பெண்களை" திருமணம் செய்ய உதவும்.. எதிர்ப்பை கிளப்பிய நர்சிங் பாடப் புத்தகம்!

பக்கத்தின் கடைசி வரி, வரதட்சணை முறை "அசிங்கமான பெண்களை" திருமணம் செய்ய உதவும் என்று கூறுகிறது.

author-image
WebDesk
New Update
Dowry

Nursing text book says the dowry system can help marry off ugly looking girls

வரதட்சணை முறையின் "தகுதிகள் மற்றும் நன்மைகள்" பட்டியலிடும் நர்சிங் பாடப்புத்தகத்தின் ஒரு படம் இப்போது சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது.

Advertisment

'செவிலியர்களுக்கான சமூகவியல்' புத்தகத்தை டி கே இந்திராணி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் அட்டையில் இந்திய நர்சிங் கவுன்சில் பாடத்திட்டத்தின்படி எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் ’ வரதட்சணை முறையின் "தகுதிகள் மற்றும் நன்மைகள்" காட்டும் பாடப்புத்தக்கத்தின் புகைப்படம் ட்விட்டரில் வெளியானது. ஞாயிற்றுக்கிழமை பகிரப்பட்ட இந்த படம்’ நெட்டிசன்களிடமிருந்து கோபமான எதிர்வினைகளைத் தூண்டியது.

இது தொடர்பாக இந்திய நர்சிங் கவுன்சில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், 'இந்திய நர்சிங் கவுன்சில் எந்த எழுத்தாளரையோ அல்லது பதிப்பகத்தையோ அங்கீகரிக்கவில்லை அல்லது எந்த எழுத்தாளரையும் இந்திய நர்சிங் கவுன்சில் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை.

இந்தியாவில் உள்ள செவிலியர்கள் மற்றும் செவிலியர் கல்விக்கான தேசிய ஒழுங்குமுறை அமைப்பு அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட "பல்வேறு நர்சிங் திட்டங்களுக்கான பாடத்திட்டங்களை மட்டுமே பரிந்துரைக்கிறது" என்று தெளிவுபடுத்தியது.

அந்த புத்தகத்தின் பக்கத்தை ட்வீட்டரில் பகிர்ந்த சிவசேனா தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான பிரியங்கா சதுர்வேதி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை புழக்கத்தில் இருந்து நீக்குமாறு அழைப்பு விடுத்தார் மற்றும் நம் பாடத்திட்டத்தில் அவை இருப்பது "அவமானம்" என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஃபர்னிச்சர், பிரிட்ஜ் மற்றும் வாகனங்கள் போன்ற சாதனங்களுடன் "புதிய குடும்பத்தை நிறுவுவதற்கு வரதட்சணை உதவியாக இருக்கும்" என்று புத்தகத்தின் பகுதி கூறுகிறது.

மேலும் பக்கத்தின் கடைசி வரி, வரதட்சணை முறை "அசிங்கமான பெண்களை" திருமணம் செய்ய உதவும் என்று கூறுகிறது.

வரதட்சணை நாட்டில் நீண்ட காலமாக தடைசெய்யப்பட்ட போதிலும் இன்னும் தொடர்கிறது.

வரதட்சணை கேட்டு பெண்கள் துன்புறுத்தப்படுவதும், உடல் ரீதியாக தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், தற்கொலைக்கு தள்ளப்படுவதும் பற்றிய செய்திகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இது போன்ற புத்தகங்கள் கல்லூரி அளவிலான மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெண்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment