Advertisment

நேர்மைக்கு கிடைத்த பரிசு: ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்தை ரிக்‌ஷா ஓட்டுநருக்கு எழுதி கொடுத்த பாட்டி

25 ஆண்டுகளாக எங்களின் குடும்பத்திற்காக பணியாற்றும் புதாவுக்கு என்னுடைய சொத்தை சட்டப்பூர்வமாக எழுதித் தருகின்றேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
odisha woman donates property to rickshaw puller

63 வயதான மினாதி பத்னிக் தன்னுடைய கணவர் மற்றும் மகளை ஒரே ஆண்டில் இழந்து தவிக்க, ரிக்‌ஷா ஓட்டும் புதா சமால் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மினாதிக்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்துள்ளனர். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தனக்கு உதவிய புதா சமாலுக்கு ரூ 1 கோடி மதிப்பிலான நகை மற்றும் இதர சொத்துகளை வழங்கியுள்ளார் மினாதி.

Advertisment

இந்த ரிக்‌ஷா ஓட்டுநரும் அவருடைய குடும்பத்தினரும் மினாதியின் உற்ற உறவுகள் மரணத்திற்கு பிறகு உடன் இருக்கவில்லை என்றால், மினாதி யாருமற்ற தனி நபராக தவித்திருப்பார். இது தொடர்பாக மினாதி ஏ.என்.ஐ.யிடம் பேசிய போது என்னுடைய கணவர் மற்றும் மகளின் மரணங்களை தொடர்ந்து இவர்கள் தான் என்னை மிகவும் பாதுகாப்பாக கவனித்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு என்னுடைய சொத்தை எழுதித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இரண்டு அடுக்கு மாடி வீடு மற்றும் தங்க நகைகளை புதாவின் பெயரில் மினாதி எழுதிக் கொடுத்துள்ளார்.

25 ஆண்டுகளாக எங்களின் குடும்பத்திற்காக பணியாற்றும் புதாவுக்கு என்னுடைய சொத்தை சட்டப்பூர்வமாக எழுதித் தருகின்றேன். ஏன் என்றால் பிற்காலத்தில் அவரையோ அவருடயோ குடும்ப உறுப்பினர்களையோ யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறியுள்ளார் மினாதி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trending Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment