Advertisment

”இந்த 2 சமோசாவ வச்சிக்கிட்டு எங்கள மன்னிச்சிடுங்க”: அதிருப்தி வாடிக்கையாளரை சமாதானப்படுத்திய ஓலா

அபராதம் வசூலித்ததால், அதிருப்தியடைந்த அந்த வாடிக்கையாளருக்கு, அந்நிறுவனம் இரண்டு சமோசாக்களை அனுப்பிவைத்து சமாதானம் செய்துள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
ola cab, samosa, cancellation fee

ஓலா நிறுவன கார் ஓட்டுநர் பயணத்தை கேன்சல் செய்ததற்கு வாடிக்கையாளரிடம் அபராதம் வசூலித்ததால், அதிருப்தியடைந்த அந்த வாடிக்கையாளருக்கு, அந்நிறுவனம் இரண்டு சமோசாக்களை அனுப்பிவைத்து சமாதானம் செய்துள்ளது.

Advertisment

டெல்லி குர்கோவன் நகரை சேர்ந்த அபிஷேக் ஆஸ்தானா என்பவர், தன் சகோதரருடன் விமான நிலையம் செல்வதற்காக ஓலா காரை புக் செய்தார். ஆனால், அவர் புக் செய்த காரின் ஓட்டுநர் அந்த ரைடை ஏதோவொரு காரணத்திற்காக கேன்சல் செய்துவிட்டார். வாடிக்கையாளர் அல்லது ஓட்டுநர் யார் ரைடை கேன்சல் செய்தாலும், அதற்காக ஓலா நிறுவனம் வாடிக்கையாளரிடம் அபராதம் வசூலிப்பது வழக்கம். அதன்படி, கார் ஓட்டுநர் ரைடை கேன்சல் செய்ததற்காக வாடிக்கையாளரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், கோபமடைந்த அபிஷேக் ஆஸ்தானா தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், ”நேற்று ஓலா நிறுவனத்தின் கார் ஓட்டுநர் அவருடைய கடமையை செய்ய தவறியதற்கு என்னிடம் அபராதம் வசூலித்திருக்கிறது. இது எப்படி இருக்கிறது தெரியுமா? கடைக்காரரிடம் நீங்கள் சமோசா கேட்டதற்கு “இல்லை”, எனக்கூறி அவர் நம்மிடம் 10 ரூபாய் கேட்பதுபோல் உள்ளது”, என தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட், டிவிட்டரில் பரவலாக பகிரப்பட்டது. அதனால், ஓலா நிறுவனத்திற்கே இந்த விஷயம் காதுக்கு எட்டியது. இதனால், அந்த வாடிக்கையாளரை சமாதானப்படுத்த முயன்ற ஓலா நிறுவனம், அவருக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றையும், அவர் ரைடு புக் செய்த முகவரியை வைத்து இரண்டு சமோசாக்களையும் அனுப்பி வைத்தது. அந்த மன்னிப்பு கடிதத்தில், “அபராதத்தை திரும்பபெற்றுக் கொள்கிறோம். தொந்தரவுக்கு மன்னியுங்கள்”, என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: காரிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்: ஓலா நிறுவனம் அளித்த சிறப்பு பரிசு

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment