Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானவை. ஒரு முறை பார்த்து பழகிவிட்டீர்கள் என்றால் நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனின் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் குழப்பத்தையும் இறுதியில் ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடியவை. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் சுவாரஸ்யமானது. இது நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் வார்த்தைகளுடன் தொடர்புடையது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ‘லவ் யூ’ என்ற அழகான வார்த்தையைக் கண்டுபிடிப்பது வேடிக்கையாக இருக்கும். இந்த படத்தைப் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகின்றன. சில ஆப்டிகல் இல்யூஷன் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரக்கூடியவை. சில படங்கள் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துபவை. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது உங்கள் மூளைக்கும் கண்ணுக்கும் வேலை தரக்கூடியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ‘லவ் யூ’ என்ற அழகான வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். படத்தை உற்று கவனியுங்கள் ‘லவ் யூ’ என்ற அழகான வார்த்தையைக் கண்டுபிடியுங்கள். ‘லவ் யூ’ என்ற வார்த்தை எங்கே எழுதப்பட்டுள்ளது? உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு ஒரு சவால்.

இந்த படத்தில் ‘லவ் யூ’ என்ற அழகான வார்த்தையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் உங்களுக்கான சிறு குறிப்பைத் தருகிறோம்.
இந்த படத்தில் ‘லவ் யூ’ என்ற வார்த்தை எங்கே இருக்கு?
இந்த படத்தில் ஸ்மைலிகள், முகங்கள், அணைப்புகள் மற்றும் முத்தங்கள் முத்திரையிடப்பட்ட உரையாடல் இதயங்கள் மற்றும் மறைக்கப்பட்ட ‘லவ் யூ’ உட்பட பிற இனிமையான செய்திகள் உள்ளன.
படத்தை கவனமாகப் பாருங்கள், நீங்கள் ‘லவ் யூ’வை எளிதாக கண்டுபிடிக்க முடியும். கண்டுபிடித்துவிடீர்களா? இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இன்னொரு குறிப்பைத் தருகிறோம்.
அதற்கு முன், படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள் ‘லவ் யூ’ என்ற அழகான வார்த்தையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த படத்தில் ‘லவ் யூ’ என்ற அழகான வார்த்தை எங்கே இருக்கிறது? அது படத்தின் இடது பக்கம் இருக்கிறதா அல்லது வலது பக்கம் இருக்கிறதா என்று கேட்கலாம். உங்களுக்கான குறிப்பு இதோ.
‘லவ் யூ’ என்ற வார்த்தை இந்த படத்தின் இடது பக்கம் கீழ் பக்கத்தில் உள்ள ஸ்மைலிக்கு அருகில் உள்ளது. இப்போது நீங்கள் அதை எளிதாக கண்டுபிடிக்கலாம். உங்களால், இன்னும், ‘லவ் யூ’ என்ற அழகான வார்த்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், எங்கே இருக்கிறது என்று கூறுகிறோம்.
இது படத்தின் கீழ் மற்றும் இடது பக்கத்தில் இரண்டு நீல மற்றும் மஞ்சள் இதயங்களுடன் உள்ளது. ஒரு இதயத்தில், ‘உண்மையான காதல்’ என்றும், மற்றொன்றில் ‘ஆத்ம துணை’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“