Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்க இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு சூறாவளிபோல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் ரிலாக்ஸாக இருக்க ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகள் பறவைகளை வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், பளபளக்கும் கண்ணாடி போலி வைரக் கற்களுக்கு இடையே உண்மையான வைரக் கல்லை கண்டுபிடிப்பதைப் போன்றது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில் கோட்சூட் போட்டுக்கொண்டு ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே 3 ஆந்தைகள் இருக்கிறது. அவற்றை 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் சவால். கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் மாஸ் பாஸ். ஏனென்றால், இந்த சவால் மிகவும் கடினமானது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் மிகவும் சுவாரசியமானது. அதே நேரத்திலும் குழப்பமானதும் சவாலனதும்கூட. அது எந்த அளவுக்கு குழப்பமானது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிப்பது என்பது முதல் பார்வையில் மிகவும் எளிதாக இருக்கும். கண்டுபிடித்துவிடலாம் என்று தேடத் தொடங்கினால், சிக்கல் விழும். தீவிரமாகத் தேடத் தொடங்கினால், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். எங்கே இருக்கிறது தெரியவில்லையே என்று முழித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் மூளையைக் குழப்பும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தை, ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. அவருடைய பிளாகில் வெளியாகி உள்ள இந்த டிஜிட்டல் ஓவியத்தில் ஆண்களும் பெண்களும் கோட்சூட் அணிந்து படம் முழுவதும் ஆட்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே 3 ஆந்தைகளை மறைத்து வைத்துள்ளார். அந்த 3 ஆந்தைகளையும் 30 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். ஏனென்றால், 3 ஆந்தைகளைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. மிகவும் கடினமாக இருக்கும். அதனால்தான், சொல்கிறோம் 3 ஆந்தைகளையும் 30 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ் பாஸ். ஆந்தைகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் இந்நேரம் ஆட்களுக்கு இடையே மறைந்திருக்கும் 3 ஆந்தைகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே மாஸ்தான், உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, இன்னும் நீங்கள் 3 ஆந்தைகளையும் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். ஒரு ஆந்தை வெள்ளை நிறத்தில் இருக்கிறது. மற்ற 2 ஆந்தைகளும் படத்தின் கீழ்ப் பகுதியில் உள்ளது. இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
3 ஆந்தைகளையும் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நல்லது. கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக ஆந்தைகள் எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிறவையாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.