Advertisment

என்ன மாயம் செய்தாலும் பூனை புலியாகிவிடாது… 4 பூனைக் குட்டிகளை கண்டுபிடிங்க ஷார்ப்னு நிரூபிங்க!

Optical illusion: இன்றைய ஆப்டில் இல்யூஷன் படத்தில் கார்டூன் புலிகளுக்கு இடையே 4 பூனைக் குட்டிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். என்ன மாயாஜாலம் செய்தாலும் பூனை புலியாகிவிடாது இல்லையா? பூனைக் கூட்டிகளைக் கண்டுபிடித்து நீங்க ஷார்ப் என நிரூபியுங்கள்.

author-image
WebDesk
New Update
என்ன மாயம் செய்தாலும் பூனை புலியாகிவிடாது… 4 பூனைக் குட்டிகளை கண்டுபிடிங்க ஷார்ப்னு நிரூபிங்க!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயாஜாலத்தால் மனதை மருளச் செய்யும். சுவாரசியத்தில் சொக்க வைக்கும். விடை கண்டுபிடிக்கும்போது உங்களை வெற்றியாளராக உணர வைக்கும்.

Advertisment

இன்றைய ஆப்டில் இல்யூஷன் படத்தில் கார்டூன் புலிகளுக்கு இடையே 4 பூனைக் குட்டிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். என்ன மாயாஜாலம் செய்தாலும் பூனை புலியாகிவிடாது இல்லையா? பூனைக் குட்டிகளைக் கண்டுபிடித்து நீங்க ஷார்ப் என நிரூபியுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விடை தேடுவது என்பது பளபளப்பான கண்ணாடி கற்களுக்கு மத்தியில் வைரக்கல்லைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. போலிகளுக்கு நடுவே உண்மையான பொருளைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி தருகிறது என்று கூறுகிறார்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு கார்ட்டூன் ஸ்டைலில் புலிகள் வரையப்பட்டுள்ளது. அந்த புலிகளுக்கு நடுவே 4 புலிக் குட்டிகள் மறைந்திருக்கிறது. புலிகளைப் போலவே இருக்கும் பூனைகள் உங்கள் கண்களை ஏமாற்றலாம். அறிவியல்படி புலிகளே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான். அதனால், என்ன மாயாஜாலம் செய்தாலும் பூனை புலியாகிவிட முடியாது இல்லையா? அதனால், அந்த 4 புலிக் குட்டிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் வரைந்து தனது பிளாகில் வெளியிட்டுள்ளார்.

இந்நேரம் நீங்கள் புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைக் குட்டிகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே நீங்க ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை நீங்கள் இன்னும் 4 பூனைக் குட்டிகளையும் கண்டுபிடிக்க வில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய 4 பூனைக் குட்டிகளும் எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment