Optical illusion game: சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் வெளியாகி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. நெட்டிசன்களின் அடிக்ஷனாகி இருக்கிறது.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிருக்கான விடையைத் தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போல. இன்னும் சரியாக சொல்வதென்றால், கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. அப்படிதான், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பாறைகள் நிறைந்த மலைப் பகுதியில் ஒரு மான் மறைந்திருக்கிறது. அதை 19 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் பெஸ்ட்.
ஏனென்றால், இந்தப் அடத்தில் மறைந்திருக்கும் மானை இதுவரை வெறும் 3% நெட்டிசன்கள் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நீங்கள் மானைக் கண்டுபிடித்துவிட்டால், உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய குறிப்புகளைத் தருகிறோம்.
மலைச் சரிவில் உள்ள ஒவ்வொரு பாறையையும் சரிபாருங்கள். படத்தின் இடது மூலையில் இருந்து தொடங்கி, மையப் பகுதியையும் வலது பக்கத்தையும் சரியாகப் பாருங்கள். மேலே இருந்து பார்த்து, படிப்படியாக கீழே சென்று படத்தைப் பார்க்கவும். நீங்கள் இன்னும் மானைக் கண்டுபிடிப்பீர்கள். கழுகுக் கண்கொண்டு தேடினால், மானைக் கண்டுபிடிப்பீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"