இந்த படத்துல மறைந்திருக்கும் காட்டுக்கு ராஜா சிங்கம்… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்!
Optical Illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் காட்டுக்கு ராஜா சிங்கம் மறைந்திருக்கிறது. அதை 15 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் கிங். ஏனென்றால், இது அந்த அளவுக்கு சவாலானது.
Optical Illusion game: சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாகி வருகிறது. ஏனென்றால், அதன் சுவாரசியத்தில் நெட்டிசன்கள் மயங்கிப் போய் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். தீராத தாகத்துடன் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து புதிர்களை விடுவித்து வருகின்றனர்.
Advertisment
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மறைந்திருக்கும் சிங்கத்தை உங்களால் 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடிக் முயற்சி செய்து தோல்வியைத் தழுவியுள்ளனர். அதனால்தான் சொல்கிறோம். காட்டுக்கு ராஜாவான சிங்கத்தை 15 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் நீங்கள்தான் கிங் என்கிறோம்.
யூடியூபில் வெளியான ஒரு வீடியோவில் இடம் பெற்றுள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை 15 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற சவாலில் பெரும்பாலானவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிய நிலையில், நீங்கள் கண்டுபிடித்து கிங் ஆக இருப்பீர்கள். என்று நம்புகிறோம். கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.
உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சிங்கம் இந்த படத்தின் ஓரங்களில் இல்லை. இப்போது மீண்டும் ஒரு முறை படத்தை உற்று கவனியுங்கள். சிங்கத்தை கண்டுபிடியுங்கள்.
சிங்கத்தை இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”