Advertisment

இந்த படத்துல மறைந்திருக்கும் 6 விலங்குகள்..13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இயற்கை ஓவியத்தில் மறைந்திருக்கும் 6 விலங்குகளை 13 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், கூர்மையான பார்வைத்திறனும் புத்திக் கூர்மையும் உள்ளவர்களால்தான் முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திகொண்டிருகிறது. நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று தீர்வு கண்டு வருகிறார்கள்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் உற்சாகம் அடைந்துவிடுகிறார்கள். இது வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கு பயிற்சி தருகிற விளையாட்டாகவும் இருக்கிறது.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இயற்கை ஓவியத்தில் 6 விலங்குகள் மறைந்திருக்கிறது. அதை 13 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களுக்கு தீர்வு காண்பதில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், கூர்மையான பார்வைத்திறனும் புத்திக் கூர்மையும் உள்ளவர்கள்தான் 6 விலங்குகளையும் 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியும்.

இந்த படத்தில் மறைந்துள்ள 6 விலங்குகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், சாதாரணமாக குறைந்தது 5 நிமிடங்களாவது தேவைப்படும். ஆனால், 13 நொடிகளில் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலானது.

இந்நேரம் நீங்கள் இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் 6 விலங்குகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, உங்களால் 6 விலங்குகளையும் முழுவதுதுமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.

முதலில் இந்த ஓவியத்தில் என்னென்ன விலங்குகள் மறைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறோம். முதலை, ஒட்டகம், வண்ணத்துப்பூச்சி, பாம்பு, மான், முயல் என 6 விலங்குகள் மறைந்திருக்கிறது.

இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்து இந்த 6 விலங்குகளின் உருவம் எங்கே மறைந்திருக்கிறது என்று உன்னிப்பாகத் தேடுங்கள்.

இப்போதும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், 6 விலங்குகளும் எங்கே மறைந்திருக்கிறது என்று நாங்கள் உங்களுக்கு காட்டுகிறோம்.

முதலை

publive-image



இது படத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இது கண்களுக்கு நேராக உள்ளது. படத்தின் மற்ற பகுதிகளை விட வித்தியாசமான நிறத்தைக் கொண்டுள்ளது. முதலையின் தோல் வடிவம் தெளிவாகத் தெரியும் பாருங்கள்.

ஒட்டகம்

publive-image

ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க, முதலில் அதன் முகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இலைகளுக்கு இடையில் முகத்தை கண்டுபிடித்துவிட்டால், முழு ஒட்டகத்தை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். படத்தின் மலை சிகரங்களில் ஒன்று ஒட்டகத்தின் உடல் என்பதைப் பாருங்கள்.

வண்ணத்துப்பூச்சி

publive-image

வண்ணத்துப்பூச்சிகள் என்றாலே பூக்கள் இருக்கும் இடத்தில்தான் இருக்கும் இல்லையா. ஆனால், காட்டுப் பூக்களுக்கு மத்தியில் வண்ணத்துப்பூச்சியைக் கண்டறிவது கடினமாக இருக்கும். இந்த படத்தில், சிறிய வண்ணத்துப்பூச்சி பூவின் இதழ்களில் அதே வண்ணத்தில் இருக்கிறது பாருங்கள்.

பாம்பு

publive-image

பாம்பு தலையை விரித்து படமெடுக்கும் படத்தை வைத்து பாம்பைக் கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், மரத்தின் அடியில் உள்ள புதரில் பாருங்கள். பாம்பின் தலை நீண்ட புற்களை ஒத்திருக்கும். புதரில் மறைந்திருக்கும் பாம்பை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

மான்

publive-image

மானைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். மானின் இயல்பைப் போலவே, அது ஒரு மரத்தின் பின்னால் மறைந்திருக்கும். இந்த படத்தின் வலது மூலையில் மான் நிற்பதைப் பாருங்கள்.

முயல்கள்

publive-image

நீங்கள் முயல்களை தீவிரமாக தரையில் தேடுவீர்கள். ஆனால், உங்களால் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், முயல்கள் மரக்கிளைகளில் தொங்கிக்கொண்டு இலைகளை உண்ணுவதில் மும்முரமாக இருக்கிறது பாருங்கள். முயல்களை கண்டுபிடிப்பதில் சிரமம் என்னவென்றால், அவை படத்தில் தலைகீழாக வைக்கப்பட்டுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment