Advertisment

பனிப் பிரதேசத்தில் மறைந்திருக்கும் பனிச் சிறுத்தை… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் பிஸ்தா!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி சூழ்ந்த ஒரு பனிப் பிரதேச மலையில் மறைந்திருக்கும் பனிச் சிறுத்தையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க பிஸ்தாதான்.

author-image
WebDesk
New Update
பனிப் பிரதேசத்தில் மறைந்திருக்கும் பனிச் சிறுத்தை… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் பிஸ்தா!

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி சூழ்ந்த ஒரு பனிப் பிரதேச மலையில் ஒரு பனிச் சிறுத்தை மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பிஸ்தாதான். ஏனென்றால் அந்த அளவுக்கு கடினமானது.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றாலே நெட்டிசன்கள் குஷியாகிவிடுகிறார்கள். அதன் சுவாரசியத்தில் கிறங்கிப்பொன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களை விடுவிக்கும் வேட்கையில் இணையத்தில் படையெடுத்து வருகிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன்படங்களின் புதிரில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் முதல் பார்வையில் மிகவும் எளிமையாக இருக்கும். விடையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து படத்தில் விடையைத் தேடத் தொடங்கினால், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், சற்று உற்று பார்த்தால், நீங்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பும். விடை எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் நிற்கும்போது திகைத்து நிற்கும்போது உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் விடை தேடுவது என்பது ஜாலியாக ரிலாக்ஸாக இருக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம், ஒரு பனிப் பிரதேசத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பனி சூழ்ந்த மலைப் பகுதியில் ஒரு பனி சிறுத்தை மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். அப்படி 10 நொடிகளுக்குள் நீங்கள் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் நீங்கள்தான் பிஸ்தா. ஏனென்றால், இந்த படத்தில் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான சவால்.

publive-image

தி சன் இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கண்ணைக் கவரும்படி இருக்கிறது. அதே நேரத்தில் மிகவும் குழப்பமானதாகவும் இருக்கிறது. இந்நேரம் நீங்கள் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் பிஸ்தாதான் பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் இன்னும் பனிச்சிறுத்தையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பனிச்சிறுத்தையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பனிச் சிறுத்தை ஒரு பனியில் இல்லை. பனி இல்லாத பகுதியில் நின்றுகொண்டிருக்கிறது. இப்போது படத்தை நன்றாகப் பார்த்து பனிச் சிறுத்தையைக் கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment