இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் அரை நிமிஷத்தில் 2 விலங்குகளை கண்டுபிடிக்க சொல்லி சவால் விடுகிறது. உங்கள் பார்வைக் கூர்மை புத்திசாலித் தனத்தைக் பயன்படுத்தி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், ஒருவருக்கு முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் குண நலனையும் வெளிப்படுத்துவதால் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், உள்ள இரண்டாவது விலங்கைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது. நீங்கள் அதைக் கண்டுபிடித்துவிட்டால், அறிவாற்றல் திறன்களுக்கு எல்லையே இல்லாத 2% மக்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள். இருப்பினும், அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை, இந்த ஆப்டிகல் இல்யுஷன் சோதனை எளிதானது அல்ல.
சில நேரங்களில் ஆப்டிகல் இல்யூஷன் சோதனைகள் மனநல மருத்துவர்களிடம் வெளிப்படையாக கூறாத மக்களின் உள்ளார்ந்த எண்ணங்களைக் கண்டறிய மனநல மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
கீழே உள்ள படத்தைப் பாருங்கள், இந்த படத்தில் 2 விலங்குகள் உள்ளன. இதில் நீங்கள் எந்த விலங்குகளைக் பார்த்தீர்கள் என்று கூறுங்கள்.
இந்த படத்தில், ஒரு பறவை மரத்தில் ஒரு துண்டு ரொட்டி அல்லது பீட்சாவுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். இரண்டாவது ஒரு விலங்கு இருக்கிறது. அது என்ன என்று கண்டுபிடியுங்கள்.
என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்கிறோம். அந்த விலங்கு ஒரு ஓநாய். என்ன ஓநாய் தெரியவில்லையா? இப்போது படத்தை தலைகீழாக பாருங்கள். இப்போது ஓநாய் தெரியும் பாருங்கள்.
இந்தப் படத்தை டிக்டாக் பயனர் ராணா அர்ஷத் ஆப்டிகல் இல்யூஷன் சோதனை படமாக பதிவேற்றினார். அவர் இந்த படத்தில் இன்னொரு விலங்கைக் கண்டுபிடிக்க பயனர்களுக்கு 20 வினாடிகள் கொடுத்தார். ஆனால், பலரும் 20 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியடைந்தார்கள். ஆனால், நீங்கள் எத்தனை வினாடிகளில் 2வது விலங்கை கண்டுபிடித்தீர்கள் என்று கூறுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.