Advertisment

மாயாஜால ஓவியத்தில் எத்தனை பெண்கள் மறைந்திருக்கிறார்கள்? ஒரு நிமிஷத்தில் கண்டுபிடிங்க

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் ஒரு பெண் மட்டும் இல்லை மேலும் சில பெண்கள் மறைந்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு நிமிடத்தில், இந்த ஓவியத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பதை சரியாக கண்டுபிடியுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாயாஜால ஓவியத்தில் எத்தனை பெண்கள் மறைந்திருக்கிறார்கள்? ஒரு நிமிஷத்தில் கண்டுபிடிங்க

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு புயல் மாதிரி இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது. பார்ப்பவர்களின் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுது போக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாம பார்ப்பவர்களின்ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும். ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் ஒரு உருவம் மட்டுமே தெரியும், ஆனால், உற்று கவனித்தால் பல உருவங்கள் தெரியும். இந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைப்பதோடு அவர்களின் முதல் பார்வையில் என்ன பார்த்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் ஆளுமையையும் வெளிப்படுத்தும். அதே நேரத்தில் அனைத்து ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களும் ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியவை அல்ல.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம், மாயாஜாலம் காட்டும் இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் பெண்கள் எத்தனை பேர் கண்டுபிடியுங்கள் என்று பார்வையாளர்களுக்கு சவால் விடுகிறது. இது உக்ரேனிய கலைஞரின் ஒரு பெண்ணின் ஓவியம். இருப்பினும், இந்த ஓவியத்தில் ஒரு பெண் மட்டும் இல்லை மேலும் சில பெண்கள் மறைந்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு நிமிடத்தில், இந்த ஓவியத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பதை சரியாக கண்டுபிடியுங்கள்.

ஓவியத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க சிரமமாக இருக்கிறதா? உங்களுக்கு உதவ சில குறிப்புகளைத் தருகிறோம். இந்த ஓவியத்தில் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று பெண்கள் இல்லை 4 பெண்கள் இருக்கிறார்கள்.

ஒலெக் ஷுப்லியாக் ஒரு உக்ரேனிய கலைஞர் ஆவார், அவர் அவர் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைபவர். அவரது ஓவியங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு சவால் விடுகிறார். அவரது ஓவியமான 'நான்கு பெண்கள்' உங்களை ஒரு கற்பனை உலகத்துக்கு அழைத்துச் செல்லும். அங்கே, நீங்கள் ஒரு பெண்ணைப் பார்ப்பதன் மூலம் மற்ற பெண்களை கண்டுபிடிக்க தொடங்குவீர்கள், ஆனால், இந்த ஓவியம் எப்படியாவது நான்கு பேரைக் கண்டுபிடிக்க வழிவகுத்துவிடும்.

publive-image

ஓவியத்தில் முதல் பெண்

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தின், முதல் தோற்றத்தில் ஒரு பெண் நின்று கொண்டு தொலைபேசியில் பேசுவது போல் தெரிகிறது.

publive-image

இரண்டாவது பெண்

உற்று கவனித்தால், முதல் பெண்ணின் காதுகளுக்கு அருகில் அவளது உள்ளங்கைகளைக் காணலாம். ஆம், அழகான கூந்தல் கொண்ட பெண்ணின் உள்ளங்கையில் தான் இரண்டாவது பெண் இருக்கிறாள்.

publive-image

மூன்றாவது பெண்

மூன்றாவது பெண்ணைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் வெற்றி பெற்றால், இந்த புதிரில் வெற்றி பெற்ற 40% பேரில் நீங்களும் இருப்பீர்கள். இந்த ஓவியம் அல்லது படத்தைப் பார்த்தவர்களில் 60% பேர் மூன்றாவது மற்றும் நான்காவது பெண்ணைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்துள்ளனர்.

நீங்கள் ஆந்து கூர்மையாக பார்க்கும்போது, ​​​​பெண்ணின் கைகளிலிருந்து ஒரு மூக்கு வெளிப்படுவதைக் காணலாம். ஒரு ஜோடி கண்கள் மற்றும் ஒரு ஜோடி உதடுகளையும் நீங்கள் காணலாம்.

publive-image

நான்காவது பெண்

அழகான முடி கொண்ட முதல் பெண்ணின் வயிற்றைப் பார்த்தால் நான்காவது பெண்ணைக் கண்டறிவது பலருக்கு எளிதாக இருக்கும். நடுப்பகுதியில் உதடுகளைப் பார்க்க முடியுமா? அங்குதான் உங்கள் நான்காவது பெண் இருக்கிறார். முதல் பெண்ணின் வயிற்றுக்கு கீழே நான்காவது பெண்ணின் முழுமையும் உள்ளது. உங்கள் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்த கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

இது உங்களுக்கு நல்ல கண்பார்வை மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் இருப்பதைக் குறிக்கிறது. மனித மூளையின் சில பகுதிகளில் கவனம் செலுத்தும் பல ஆப்டிகல் மாயைகள் உள்ளன. ஆனால் இது உங்கள் அறிவாற்றல் திறன்களுக்கு சவால் விடக் கூடியது. இந்த ஓவியத்தில் நீங்கள் மூன்று பெண்களைப் பார்த்தால், உங்கள் மூளை நன்றாகச் செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment