Optical Illusion game: ஒவ்வொரு நாளும் விதவிதமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் நுண்ணறிவை சோந்தனை செய்யும் ஐக்யூ டெஸ்ட் சம்பந்தமானது. இந்த படத்தில் 7 மனிதர்கள் ஒரு பூனை மறைந்திருக்கிறது. அதை 30 நொடிகளில் கண்டுபிடிங்க..
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடியுங்கள், குதிரையைக் கண்டுபிடியுங்கள், பறவையைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து பகிரப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான புதிர் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழப்பமானவை. முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முதலில் குழப்பத்தை அளிக்கும் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியவையாகவும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், நுண்ணறிவை பரிசோதனை செய்கிற ஐக்யூ டெஸ்ட் படங்களாகவும் இருக்கின்றன.
அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம், ஒரு ஐக்யூ டெஸ்ட் படம். உங்கள் நுண்ணறிவை சோதனை செய்கிற இந்த படத்தில் 7 மனிதர்கள் மற்றும் 1 பூனை மறைந்திருக்கிறது. அவற்றை 30 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் அனைவருக்குமான சவால். நெட்டிசன்கள் பலரும் மறைந்திருக்கும் பூனையை வெறித்தனமாக தேடி வருகிறார்கள்.
இந்த படத்தில் மறைந்திருக்கிற 7 மனிதர்கள் மற்றும் 1 பூனையை 30 நொடிகளுக்குள் விரைவாகக் கண்டுபிடித்து உங்கள் ஐக்யூ டெஸ்ட் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த படம் @darkseidy என்ற TikTok கணக்கில் பகிரப்பட்டது. படத்தில் 7 பேரையும் ஒரு பூனையையும் கண்டுபிடிப்பதுதான் சவால். உங்கள் மூளை சிறப்பாக செயல்படுகிறதா இல்லையா என்பதைச் சொல்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் நுண்ணறிவு அளவைச் சோதிக்க உதவும். இந்த படத்தில் நீங்கள் இன்னும் அதிகமான நபர்களை கண்டறிந்தால், உங்கள் IQ நிலை அதிகமாகக் கருதப்படும்:
1. உங்களால் 7 பேரையும் ஒரு பூனையையும் கண்டுபிடிக்க முடிந்தால், உங்கள் மூளை "சிறந்த நிலையில்" உள்ளது.
2. இந்த படத்தில் உங்களால் 6 முகங்களை கண்டுபிடிக்க முடிந்தால், உங்கள் மூளை "நல்ல நிலையில்" உள்ளது.
3. நீங்கள் 2 அல்லது 3 மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்றால், உங்களுக்கு உதவி தேவை என்று அர்த்தம்.
நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவ விடையைக் கீழே தருகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிப்பவை. நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.