வட இந்தியாவின் ராகேஷ் உன்னி இவர்... பாகிஸ்தான் இளைஞரின் அசர வைக்கும் பாடல்

Pakistani Singer : உலகளவில், இணையத்தளம் பெரும் வளர்ச்சியைக் கண்ட நாளில் இருந்தே பலரின் திறமைகள் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதற்கு உதாரணம், வட இந்தியாவைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர் நடனம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் உன்னியின் திகைக்க வைக்கும் பாடல் திறமை.

Pakistani Singer : சமூக வலைத்தளத்தில் வைரலான சாமானியர்கள்:

முகநூல் மூலம் சமீபத்தில் மிகவும் பிரபலமான இரண்டு நபர்கள் கல்லூரி ஆசிரியர் மற்றும் ராகேஷ் உன்னி. வட இந்தியாவைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ஒரு குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி நடனம் ஆடினார். திருமண நிகழ்வில் இசைக்கப்பட்ட பழைய இந்தி பாட்டுக்கு அனைவரையும் கவரும் வகையும் நடனம் ஆடினார். இவரின் இந்த நடனம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கல்லூரி ஆசிரியர் நடனம் குறித்த செய்திக்கு

இவரைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்னதாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் உன்னி என்ற இளைஞரின் பாடல் பிரபலமானது. இவர் விஸ்வரூபம் படத்தில் வரும் உனை காணாது என்ற பாடலை பாடி, அதன் வீடியோ முகநூல் முழுவதும் வைரலானது. இதனைப் பார்த்த பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் நடிகர் கமல் ஹாசன், ராகேஷ் உன்னியை நேரில் அழைத்து பாராட்டினார்கள்.

ராகேஷ் உன்னியின் பாடல் திறமையைப் பற்றி தெரிய இதை படிக்கவும்

இவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பெயிண்டர் ஒருவர், வட இந்திய பாடகர் அர்ஜித் சிங் பாடல்களைப் பாடிய வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. அர்ஜித் சிங் பாடிய “ஹமாரி அதூரி” என்ற பாடல் இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்றிருந்தது. இதுவரை இந்தப் பாடலை பலரும் பொழுதுபோக்கிற்காக பாடியிருந்தாலும், இந்த இளைஞரின் குரல் வளம் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் இவர் நிச்சயம் பிரபலமாக வேண்டும், இவரின் திறமைக்கு தகுந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close