Advertisment

எதுக்கு போவானேன் ; எதுக்கு அலறுவானேன் - வைரலாகும் பாராகிளைடிங் வீடியோ

Viral video : முதன்முதலாக பாராகிளைடிங்கில் ஏறிய நபர், பயத்தில் தன்னை கீழே இறக்கிவிடுமாறு கெஞ்சும், கீழே இறக்கிவிடுவதற்கு லஞ்சம் கொடுக்கவும் தயார் என்று கூறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
paragliding viral video, paragliding viral video twitter reactions, paragliding man viral video, funny video

paragliding viral video, paragliding viral video twitter reactions, paragliding man viral video, funny video, funny paragliding viral video, trending, indian express, indian express news, பாராகிளைடிங், வீடியோ, வைரல்

முதன்முதலாக பாராகிளைடிங்கில் ஏறிய நபர், பயத்தில் தன்னை கீழே இறக்கிவிடுமாறு கெஞ்சும், கீழே இறக்கிவிடுவதற்கு லஞ்சம் கொடுக்கவும் தயார் என்று கூறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமூகவலைதளங்களில் விழுந்து விழுந்து புரண்டு சிரிக்கும் வகையிலான வீடியோக்கள் வைரலாகி வருவது இயல்புதான். ஆனால், தற்போது இதற்கு மாறாக, முதன்முதலாக பாராகிளைடிங்கில் ஏறிய நபர், பயத்தில் கீழே இறக்கிவிடுமாறு கெஞ்சும் வீடியோவை, நெட்டிசன்கள் பல்வேறு தலைப்புகள் இட்டு அதனை வைரலாக்கி வருகின்றனர்.

விபின் சாஹூ என்பவர், பாராகிளைடிங்கில் பறக்க ஆசைப்பட்டார். அவரது கனவு நிறைவேறும் நாளும் வந்தது. அன்று வானம் மேகமூட்டமாக இருந்தது. இருந்தபோதிலும் துணிந்து பாராகிளைடிங்கில் ஏறிவிட்டார். சிலஅடி தூரம் மேலே சென்ற உடனே, சாஹூவுக்கு உள்ளுக்குள் பயம் உண்டானது. உடனே, பாராகிளைடிங் பயிற்சியாளரிடம் தன்னை இப்போதே கீழே இறக்கிவிடுங்கள். போதும் நான் பாராகிளைடிங்கில் பயணித்தது என்று புலம்ப துவங்குகிறார். ஒருகட்டத்தில் அவரது முகம் வெளிறுகிறது. பயத்தில், தனது உள்ளங்கையை நெஞ்சில் வைத்து கீழே போகுமாறு பயிற்சியாளரிடம் கெஞ்சுகிறார். கீழே இறக்கிவிட, லஞ்சம் கூட கொடுக்க தயாராக இருப்பதாக அவர் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 6 நிமிடங்கள் கால அளவு கொண்டதாக உள்ள இந்த வீடியோவில் அவர் கெஞ்சும்போது சில கடின வார்த்தைகளையும் உபயோகப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை, நெட்டிசன்கள்ல நாட்டின் பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களுடன் தொடர்புபடுத்தி டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment