இந்த நிலை எந்த தந்தைக்கும் வரக்கூடாது.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்!

இப்படி ஆயிரம் அர்த்தங்களை சொல்லும் இந்த புகைப்படம் தான் இன்றைய வைரல்.

நாட்டின் அமைதிக்காவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் இன்னுயிரை தியாகம் செய்யும் நமது சரித்திர நாயகர்களான ராணுவ வீரர்களுக்கு எல்லோரும் மனதிலும் என்றுமே தனி இடம் உண்டு.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் வணங்குவதில் நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்வார்கள். தங்கள் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள், வாழும் இடத்தை விட்டு, நாம் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நாள் தோறும் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு சொல்லி ஓயாது.

சினிமாவில் வரும் ஹீரோக்கள் 3 மணிநேரம் மட்டுமே, ஆனால் எல்லையில் நிற்கும் நமது ரியல் ஹீரோக்கள் தங்களது கடைசி மூச்சு வரை நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்தே தங்களது உயிரை விடுகின்றனர்.

இப்படிப்பட்ட ராணுவ வீரர்களை ராணுவ தினத்தன்று மட்டுமில்லாமல் நாள் தோறும் நினைவில் கொண்டால் அதை விட அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை வேறு ஒன்றுமில்லை. இன்று காலை முதல் சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்:

எல்லா புகைப்படத்தை போல் தான் இதுவும் என்று யாரலையும் அவ்வளவு எளிதாக இதை கடந்து போக முடியாது.

எதோ ஒரு உணர்வு நம் கண்களை கலங்க வைக்கிறது. தனது மகனை  நாட்டிற்காக அர்பணித்த தந்தையின் உள்ளம் எப்படி இருக்கும்? என்ன நினைக்கும், உதடுகள் சொல்லி விட முடியாத வார்த்தைகளை கண்ணீர் சொல்லி விடுமா? ஜாக்கிரதையாக இரு மகனே என ஒவ்வொரு முறையும் போனில் பேசும் போதும் சொல்ல தோன்றும். எல்லையில் இருக்கும் அவனுக்கு எத்தனையோ போராட்டங்கள் வரும்.

ஆனால் அதை எல்லாவற்றையும் கடந்து அவன் ஜெயித்து, அடுத்த விடுமுறைக்கு வரவேண்டும் என்பது தான் ஒவ்வொரு தந்தையின் தீராத வேண்டுதலாக இருக்கும்.  பாதுகாப்புப்படை வீரர் லேன்ஸ் நாயக் நஷீர் அகமது வானின் தந்தையின் வேண்டுதலும் இதேதான்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பதன்கன்ட் கிராமத்தில் நடந்த என்கவுன்டரில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் திருப்பி தாக்கியதில் பாதுகாப்புப்படை வீரர் லேன்ஸ் நாயக் நஷீர் அகமது வானி வீர மரணமடைந்தார்.

அவரின், இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் கலந்துக் கொண்டனர். அகமது வானியின் உடலை எடுக்கும்போது, அவரின் தந்தை கண்ணீருடன் கதறினார்.

அந்தச் சமயத்தில் அருகில் இருந்த ராணுவ அதிகாரி, அந்த முதியவரை அணைத்துத் தேற்றினார். அவரை கட்டியணைத்தப்படி ”உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்” என அந்த ராணுவ வீரர் பார்வையிலேயே வெளிப்படுத்தி இருந்தார்.

இதே புகைப்படத்தை இந்திய ராணுவம் தங்களது ட்விட்டரில் வெளியிட்டு,  `நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் எப்போதும் நாங்கள் இருக்கிறோம்’ என்ற வாசகத்துடன் வெளியிட்டுள்ளது

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நாயக் நஷீரின் உயிர்தியாகத்தை போற்றி தங்களது இரங்கலை  தெரிவித்து வருகின்றனர்.  இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close