அரசு பஸ்ஸில் ஜன்னல் கம்பியில் பயணித்த புறா... டிக்கெட் கொடுக்காத கண்டக்டருக்கு மெமோ!

அரசு பேருந்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த புறா...

சேலம் மாவட்டத்தில் அரசு பேருந்தில் புறா ஒன்று ஜன்னல் கம்பியில் இருந்தபடி பயணம் செய்துள்ளது. இதற்கு அப்பேருந்தின் கண்டக்டர் டிக்கெட் வழங்கவில்லை என்பதால் அவருக்கு கடந்த வாரம் மெமோ வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மது அருந்திவிட்டு பயணம் செய்த பயணி ஒருவர், ஜன்னல் கம்பியில் புறாவை வைத்துக் கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டம் அருரில் இருந்து எல்லாவாடிக்கு, அரசு பேருந்து சென்றுள்ளது. இதனிடையே, பஸ்ஸை மறித்து பேருந்துக்குள் ஏறிய டிக்கெட் பரிசோதகர், பயணிகளிடம் சோதனை செய்துள்ளார். அப்போது, ஜன்னல் கம்பி ஒன்றில் புறார் நின்றுள்ளதாகவும், அதனுடன் மது அருந்திய பயணி ஒருவர் பேசிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைக்கண்ட அந்த டிக்கெட் பரிசோதர், டக்கென கண்டக்டர் பக்கம் திரும்பி, புறாவுக்கு டிக்கெட் கொடுத்தீர்களா இல்லையா என்று கேட்டுள்ளார். ஆனால், அந்த பயணி பேருந்தில் ஏறும்போது புறா ஏதும் கொண்டு வரவில்லை என்று கண்டக்டர் பதிலளித்திருக்கிறார். ஆனால், இந்த பதிலை ஏற்காத நிலையில், போக்குவரத்து கழக விதிகள்படி புறாவுக்கு டிக்கெட் வழங்காத கண்டக்டருக்கு மெமோ வழங்கப்பட்டது.

போக்குவரத்து கழக விதிகளின்படி, 30 புறாக்களை ஒரே நேரத்தில் பேருந்தில் ஏற்றிக்கொண்டு பயணம் செய்தால், அதற்கு நான்கில் ஒரு பங்கு கட்டம் வசூலிக்க வேண்டுமாம். ஆனால், ஒரே ஒரு புறா கொண்டு சென்றால் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று விதிகளில் இல்லை என்று கூறப்படுகிறது.

புறாவுக்கு போரா? என்பது போல தான், அந்த சமயத்தில் இந்த கண்டக்டரின் மைன்ட்வாய்ஸ் இருந்திருக்கும் போலும்.

×Close
×Close