தீபாவளி பண்டிகையை உற்சாக நடனமாடி கொண்டாடுவது மோடியின் அம்மாவா? வைரலாகும் வீடியோ

மோடியின் தாயார் ஹீராபென் மோடியை போன்று தோற்றமளிக்கும் வயதான பெண்மணி ஒருவர், தீபாவளி பண்டிகையை நடனமாடி கொண்டாடுவதுபோன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியை போன்று தோற்றமளிக்கும் வயதான பெண்மணி ஒருவர், தீபாவளி பண்டிகையை நடனமாடி கொண்டாடுவதுபோன்ற வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ”பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 97 வயதிலும், நம்பிக்கையுடனும், எளிமையாகவும் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறார்.”, என பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், மோடியின் தாயார் போன்று தோற்றம்கொண்ட வயதான பெண்மனி, தீபாவளி பண்டிகைய நடனமாடி கொண்டாடுகிறார்.

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், நடனமாடும் பெண்மணி, பிரதமர் மோடியின் தாயார்தானா என்பது உறுதியாகவில்லை. அரசியல் விமர்சகர் சுமந்த்.சி.ராமன், அந்த வீடியோவில் நடனமாடுவது பிரதமர் மோடியின் தாயார் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close