Political Memes: அரசியல்வாதிகள் ஒரு வார்த்தை தப்பித் தவறி ஸ்லிப் ஆகிவிடக்கூடாது என்கிறார்கள் இந்த சமூக ஊடக மீம்ஸ் கிரியேட்டர்கள். உடனே அதுக்கு ஒரு மீம் போட்டு வைரலாக்கி விடுகிறார்கள். அப்படி, இன்று ஆளும் கட்சி எதிர்க்கட்சி ஆதரவு நெட்டிசன்கள், அரசியல் சார்பில்லாத நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை விளாசியுள்ளனர்.
அன்றாட அரசியலை விமர்சிக்கு ஆயிரம் வார்த்தைகளில் எழுதப்படும் கட்டுரையில் வைக்கப்படுகிற விமர்சனத்தை ஒரு புகைப்படம் பேசிவிடும். அதைவிட ஒரு மீம்ஸ் கிண்டலாக சுறுக்கென்று தைத்துச் செல்கிறது.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், நாட்டாமை கவுண்டமணி, செந்தில் காமெடி மீம்ஸ் போட்டு, தகப்பனுக்கு 56 இஞ்ச் என்று குறிப்பிட்டு, கவுண்டமணி குரலில், “டேய் தகப்பா, ஜெர்மனில ஹிட்லருக்கு ஆன மாதிரி… இத்தாலில முசோலினிகு ஆன மாதிரி… இன்னிக்கு ஸ்ரீலங்கால ராஜபக்ஷெக்கு ஆகுறமாதிரி உனக்கும் ஒரு காலம் வரும்…. கண்டிப்பா வரும்…” என்று மறைமுகமாக மீம்ஸால் சாடியுள்ளார்.
கடந்த மாதம் ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு ஓவியம் வைரலாகி சர்ச்சையானது. இந்த நிலையில், பாஜக ஆதரவு முகாம் பாரதமாதாவின் தோற்றத்தைப் போல, ஒரு தமிழ்த்தாய் ஓவியத்தை வெளியிட்டதால், ட்விட்டரில் கருப்பு சிவப்பு தமிழணங்கு தமிழ்த்தாய் படங்கள் மீண்டும் வைரலாகி ட்விட்டர் போர்க்களமாகியுள்ளது.
தழித்தாய் ஓவியத்தைக் குறிப்பிட்டு, டாக்டர் க்ரோ (காகம்) என்ற டிவிட்டர் பயனர், “இந்த நாடாவை இதுக்கு முன்ன எங்கயோ பார்த்து இருக்கேன்னே?? அடேய் தமிழ் தாய்ல கூட உங்க கட்சி கலர் தானா??” என்று கவுண்டமணி குரலில் மீம்ஸால் கம்மெண்ட் அடித்துள்ளார்.
இதற்கு இடையே, கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச என்ற ட்விட்டர் பயனர், “எல்லாரும் விக்ரம் ட்ரெய்லர் பார்த்து கருத்து சொல்லிட்டு இருக்காங்க… நான் இன்னும் நெஞ்சுக்கு நீதி டிரெய்லரே பார்க்கல…” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாமக இளைஞரணி செயலாளர் ராஜ்ய சபா எம்.பி அன்புமணி ராமதாஸ், “திராவிட மாடலுக்கும் பாட்டாளி மாடலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று கூற அதற்கு, கிராசந்த் என்கிற ட்விட்டர் பயனர், “திராவிட மாடல் நிஜ மாடல்… பாட்டாளி மாடல் நிழல் மாடல்.. சரிதானே?” என்று மீம்ஸ் மூலம் கவுண்ட்டர் கொடுத்திருக்கிறார்.
அன்புமணி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 2026 இல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறியதற்கு, சவுக்கு சங்கர் அவருடைய பாணியில், “இந்த வியாதிக்கு மருந்தே இல்லையா டாக்டர்” என்று ஒரு சவுக்கு மீம்ஸ் போட்டிருக்கிறார்.
அன்பு நவீன் என்ற ட்விட்டர் பயனர், “திமுக சில இடங்களில் பம்முறது, அதிமுக பல இடங்களில் வாயவே திறக்கமா இருக்கது. அண்ணாமலை அதிகமா பேசி journalist ta நிறைய பேட்டி குடுக்குறது. எல்லாம் பிஜேபி ய எதிர்கட்சி மாறி Create பண்றாங்க அப்படின்னு எனக்கு மட்டும் தான் தோணுதா. திமுக ஏன் பம்மனும், அதிமுக வாயவே திறக்காம ஏன் இருக்கணும்” என்று பதிவிட்டதோடு, ரொம்ப வொர்ஸ்ட் ரா டேய்… என்று மீம்ஸ் போட்டுள்ளார்.
அண்ணாமலை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதற்கு, கலியுக கண்ணன் என்ற ட்விட்டர் பயனர் தொட்ரா பார்ப்போம் என்று மீம்ஸால் மிரட்டியிருக்கிறார்.
பலே பாலு என்று டிவிட்டர் பயனர், “பேட்டி’ ன்னா மட்டும் தாங்க பயம் மத்தபடி மன் கி பாத் எல்லாம் நல்லா பேசுவேங்க” என்று பிரதமர் மோடியை மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
பாக்டீரியா என்ற ட்விட்டர் பயனர், “படிக்காத போன தலைமுறை பெண்களிடம் ஆட்டம் போட்ட சாமிகள்….படித்த இந்த தலைமுறை பெண்களிடம் பயந்துகொண்டு விலகியே நிற்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
வங்கி ஊழியர்கள் பற்றி குருமூர்த்தி பேசியது சர்ச்சையாக அதற்கு யுஎஃப்பியு அமைப்பு குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதைக் குறிப்பிட்டு, நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், இம்சை அரசன் 23 புலிகேசி மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், “பாணிபூரி விற்பது கேவலமா?” என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்டதற்கு, “இல்லை… இல்லை… எல்.ஐ.சி-ய விக்கிறதுதான் கேவலம்…” என்று மீம்ஸ் மூலம் கவுண்ட்டர் கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”