Advertisment

அதிகாலையில் ஏற்பட்ட நிலஅதிர்வு; அச்சத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய பொதுமக்கள் - வீடியோ

இந்தோனேசியாவில் இன்று காலை மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
viral video, trending video, videos, Tsunami alert, Indonesia

Powerful earthquake hits Indonesia video: இன்று அதிகாலை இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. காலையில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனாலும் பெரிய அளவில் சேதாரங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் அறிவித்துள்ளது.

Advertisment

வீட்டுக்கு வந்த மலை சிங்கத்தை வரவேற்ற குட்டி நாய்; வைரலாகும் வீடியோ

இந்த நிலநடுக்கம் ஃப்ளோரஸ் கடலில் இன்று அதிகாலை 0320 ஜிஎம்டி நேரப்படி நிகழ்ந்துள்ளது. லரந்துகா என்ற பகுதியின் வடமேற்காக 70 மைல்களுக்கு அப்பால் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இரண்டு மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சேலயார் தீவில் உள்ள பள்ளி கட்டிடடங்கள், வீடுகள் சேதம் அடைந்தன. பலரும் இந்த நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

சாலையில் ஓடும் வெள்ளநீர்; தம்பி, தங்கையை உப்பு மூட்டை தூக்கிச் சென்ற அண்ணன் – வைரல் வீடியோ

நிலநடுக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட சுனாமிகள் இந்தோனேசியாவில் மட்டுமின்றி ஓரியண்டல் நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. 2004ம் ஆண்டு இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து மற்றும் இதர நாடுகளில் சுமார் 2,30,000 பேர் சுனாமியால் கொல்லப்பட்டனர். சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1. ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்த சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment