Advertisment

ஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா வெற்றி பெற்ற தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,பிளையிங் கிஸ் கொடுத்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க!” என்று ஜாலியாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Preity Zinta gives flying kiss, Preity Zinta flying kiss, Preity Zinta flying kiss to her team, ஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா, Preity Zinta flying kiss to kings xi punjab team, பிரீத்தி ஜிந்தா, ஃபிளையிங் கிஸ் கொடுத்த பிரீத்தி ஜிந்தா, கிங்ஸ் லெவன் பஞ்சாப், kings xi punjab team players, வைரல் வீடியோ, ஐபிஎல், viral vede, ipl, Preity Zinta, kings xi punjab team owner Preity Zinta, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஓனர் பிரீத்தி ஜிந்தா

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை உற்சாகப்படுத்தும் வகையில் அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ஃப்ளையிங் கிஸ் கொடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே போட்ட் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்ததடஹல் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 32 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி யாரும் எதிர்பாராத வகையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ தொடக்க ஆட்டக்காரர்களாக நன்றாக விளையாடினாலும், இருவருடைய விக்கெட்டும் விழுந்த பிறகு, அடுத்தடுத்து மனிஷ் பாண்டே மற்றும் அப்துல் சமத் அவுட் ஆகி வெளியேறினார்கள்.

இவர்களையடுத்து, பேட்டிங் செய்த விஜய் சங்கர் அதிரடியாக விளையாடி 26 ரன்கள் எடுத்ததால் ஹைதராபாத் அணி வெற்றி இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சங்கரும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஷித் கான், ப்ரியம் கார்க், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது ஆகியோரும் அடுத்தடுத்து, விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், ஹைதராபாத் அணி படுதோல்வியை சந்தித்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் இரண்டாவது பாதியில் சுதாரித்துக்கொண்டு வெற்றிகளை ஈட்டி வருகிறது. இதனால், பஞ்சாப் அணியின் கேப்டன் கேல்.எல்.ராகுல் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போடியின்போது, கிங்ஸ் பஞ்சாப் அணி வெற்றி பெற்றபோது, அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா தனது அணி வீரர்களை நோக்கி ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார். பிரீத்தி ஜிந்தா ஃபிளையிங் கிஸ் கொடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா வெற்றி பெற்ற தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அணி வீரர்களை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க!” என்று ஜாலியாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Video Viral Ipl Kings Xi Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment