பிரியா பிரகாஷ் வாரியர் : கண் அசைவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் பட்டாளமா?

வெறும் 30 நிமிட பாடலில், 3 நிமிடம் மட்டுமே வந்து போன பிரியாவிற்கு இவ்வளவு ஃபேன்ஸ் பட்டாளமா?

இந்திய அளவில் ட்ரெண்டாகியிருக்கும் கண்ணழகி பிரியா பிரகாஷ், இந்த வார வைரல் லிஸ்டில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மலையாள பெண்களுக்கு எப்போதுமே தமிழ்நாட்டில் மவுசு கொஞ்சம் கூடுதல் தான். நயன் தாரா முதல் கீர்த்தி சுரேஷ் வரை தமிழ் சினிமாவில் மலையாள நாயகிகளுக்கு ரசிகர்கள் சற்று அதிகமாகவே இருக்கின்றன. சினிமாவில் மட்டும் இருந்து வந்த இந்த கலாச்சாரம் தற்போது இணையதளங்களிலும் மேலூங்க துவங்கியுள்ளது.

பொதுவாகவே, மலையாள பெண்கள் மீது இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாகவே பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அவர்களின் முடியை ரசிப்பதில் துவங்கி கண், நிறம், புருவம் என அனைத்திலும் மலையாள பெண்கள் தனித்துவமாக தெரிவதாகவே சொல்லப்படுகிறது. இது உண்மையா? என்ற ஆராய்ச்சிக்குள் சென்றால் பல புத்தகங்களை புரட்ட வேண்டியிருக்கும். ஆனால் இந்த கருத்திற்கும், தற்போது வைரல் நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியருக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது.

ஆமாம், அடுத்த மலையாள வரவான ,  இணையத்தில் ஒரே நாளில் பிரபலமானவர் தான் ’ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர். ஒரே இரவில் பணக்காரர் ஆவது, அரசியல்வாதி ஆவது இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியமாக இருந்து வந்தது. ஆனால் பிரியாவின் வாழ்க்கையில் அது நிழமாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யூடியூப்பில் வெளிவந்த ’ஒரு அடார் லவ்’ படத்தின் ’மாணிக்க மலராய பூவி’ பாடல், ஒரே நாள் இரவில் இணையதளத்தில் ட்ரெண்ட் அடித்தது. குறிப்பாக பாடலில், பிரியா பிரகாஷ் தரும் கண் அசைவுகள் இளைஞர்களுக்கு ஃபீவரையே வரவைத்து விட்டது.

அடுத்த நொடியே அவரின், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களை ரசிகர்கள் அதிகளவில் தொடர ஆரம்பித்து விட்டனர். கூகுளில் அதிகளவில் தேடப்படும் பிரபலங்கள் லிஸ்டில் பிரியா முதலிடத்தைப் பெற்றார். இதுப்பற்றி கேட்டால், சிரித்துக் கொண்டே ”எனக்கே தெரியலப்பா” என்கிறார் அந்த கண்ணழகி.

பிரியாவிற்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம். ‘சங்ஸ்’ என்ற மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, 12 வகுப்பு படித்த காரணத்தினால் வாய்ப்பை மறுத்துள்ளார். இப்போது, திரூச்சூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் படிக்கிறார். இந்த சமயத்தில் ’ஒரு அடார் லவ்’ படத்தில் பள்ளி மாணவியாக நடிக்க வாய்ப்பு வந்த போது உடனே ஓகே சொல்லிவிட்டாராம். வெறும் 30 நிமிட பாடலில், 3 நிமிடம் மட்டுமே வந்து போன பிரியாவிற்கு இவ்வளவு ஃபேன்ஸ் பட்டாளமா? என்று, பிரபலங்கள் பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். இப்ப காலேஜ் ஸ்டூடன்ஸ், இணையதள வாசிகள், மீம்ஸ் கிரியேட்டர்கள் என அனைவரின் பேச்சும் வைரல் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பற்றி தான்.

×Close
×Close