கொஞ்ச நாட்கள் அமைதியாய் இருந்த இண்டர்நெட் குயின் ப்ரியா பிரகாஷ் வாரியர் மீண்டும் ரெண்டிங்கில் இடம் பிடிக்க தொடங்கிவிட்டார். இம்முறை அவர் கண்ணடிக்கும் வீடியோ அல்ல. புடவை கட்டிய புகைப்படம்.
ப்ரியா வாரியர்:
மலையாள பெண்களுக்கு எப்போதுமே தமிழ்நாட்டில் மவுசு கொஞ்சம் கூடுதல் தான். நயன்தாரா முதல் கீர்த்தி சுரேஷ் வரை தமிழ் சினிமாவில் மலையாள நாயகிகளுக்கு ரசிகர்கள் சற்று அதிகமாகவே இருக்கின்றன. சினிமாவில் மட்டும் இருந்து வந்த இந்த கலாச்சாரம் சமீப காலமாக இணையதளங்களிலும் மேலூங்க துவங்கி விட்டது.
அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் தான் ஜிமிக்கி கம்மல் ஷெரீன், கண்ணழகி ப்ரியா வாரியர் போன்றோர். இணையத்தில் ஒரே நாளில் ஓபமா ஆகிய லிஸ்டில் முதலிடத்தில் இருந்தவர் தான் ப்ரியா வரியார்.
’ஒரு அடார் லவ்’ படத்தின் ’மாணிக்க மலராய பூவி’ பாடல், ஒரே நாள் இரவில் இணையதளத்தில் ட்ரெண்ட் அடித்தது. குறிப்பாக பாடலில், ப்ரியா வாரியர் தரும் கண் அசைவுகள் இளைஞர்களுக்கு ஃபீவரையே வரவைத்து விட்டது.
அடுத்த நொடியே அவரின், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களை ரசிகர்கள் அதிகளவில் தொடர ஆரம்பித்து விட்டனர். கூகுளில் அதிகளவில் தேடப்படும் பிரபலங்கள் லிஸ்டில் ப்ரியா முதலிடத்தைப் பெற்றார்.
வெறும் 30 நிமிட பாடலில், 3 நிமிடம் மட்டுமே வந்து போன ப்ரியாவிற்கு இவ்வளவு ஃபேன்ஸ் பட்டாளமா? என்று, பிரபலங்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர். அவ்வளவு தான் அதன் பிறகு ப்ரியா வாரியர் புகழின் உச்சிக்கே சென்றார். ரஜினி – கமலுடன் செல்பி, சச்சினுடன் ஆட்டோகிராப் என்று பிரியா வாரியாரின் புகைப்படங்களில் பிரபலங்கள் அதிகளவில் இடம் பெற தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் சமீப காலமாக அவர் குறித்த பேச்சு சற்று ஓய்ந்தி இருந்தது. தற்போது மீண்டும் இணையத்தில் ப்ரியா வாரியர் ட்ரெண்ட் ஆகியுள்ளார். சமீபத்தில் மலையாள ஸ்டைலில் அவர் புடவை கட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியது.
அந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள். அழகு.. ஸ்டைல்.. சிரிப்பு,, கண்ணழகி.. க்யூட்டி என்று ப்ரியாவை புகழ ஆரம்பித்து விட்டனர். புடவை கட்டினால் கூட வைரல் என்பது ப்ரியா வாரியரின் வாழ்க்கையில் மட்டுமே சாத்தியம்,