வாவ்!! சொல்ல வைத்த இந்திய அழகிகள்: மேடையில் ஜொலித்த பிரம்மாண்ட ஆடைகள்..

கார்டூனில் வரும் வில்லியை போல் பிரியங்கா சோப்ரா காட்சியளித்தாகவும்

நடிகை  பிரியங்கா  சோப்ரா மற்றும்  தீபிகா படுகோன் ஆகியோர் சமீபத்தில் கலந்துக் கொண்ட விழாவில் ஒன்றில் அணிந்திருந்த ஆடை சமூகவலைத்தளங்களில் எல்லோராலும்  பேசப்பட்டு வருகிறது.

ஆண்டுந்தோறும் அமெரிக்கா மாகாணத்தில்  நடைப்பெறும்  சிறந்த ஆடை மற்றும் ஹார்ஸ்டல் குறித்த  MET GALA 2018   விழாவில்  பாலிவுட் உச்ச நட்சித்திரங்களான தீபிகா படுகோனே மற்றும் பிரியங்க சோப்ரா  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் இவர்கள் இருவரும் அணிந்து வந்த ஆடை பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. நீ ? நான்? என்று போட்டிப் போட்டுக்கொண்டு  வித்யாசமான, நேர்த்தியான ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.  கடந்த ஆண்டு   இதே விழாவில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்திருந்த ஆடை கடும் சர்ச்சைகளை எழுப்பில் இருந்தது.  இந்நிலையில்,  இம்முறை நீளமான   அரேபியன் அல்லது எகிப்து  ராணிகள்  அணியும் ஆடையில்  வந்திருந்தார்.

 

அவரைப்போலவே நடிகை திபீகாப்படுகோனும்,  சிவப்பு நிறத்தில் தனக்கெ உரிதான பாணியில், கவுன் ஒன்றை  அணிந்து வந்திருந்தார். இவர்களின் இருவரின் ஆடை குறித்த விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளனர். அதே நேரத்தில், நியூயார்க் பத்திரிக்கை ஒன்றில் நடந்து முடிந்த விழாவில் மிகவும் மோசமான உடை அணிந்து வந்த பெண்கள் வரிசையில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டிஸ்னி கார்டூனில் வரும் வில்லியை போல் பிரியங்கா சோப்ரா காட்சியளித்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

×Close
×Close