நிச்சயதார்த்த மோதிரத்தை மறைக்க பிரபல நடிகை செய்த செயல்... கேமிராவில் பதிவான காட்சிகள்!

எதற்கு நிச்சயதார்த்தம் ஆனதை வெளியில் மறைக்க வேண்டும்?

Priyanka Chopra Engagement Ring: நடிகை பிரியங்கா சோப்ரா, தனது நிச்சயதார்த்த மோதிரத்தை கேமராவில் இருந்து மறைத்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழில் விஜய்யுடன் ’தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டில் மாபெரும் வெற்றியை பதித்து விட்டு , சில காலம் ஹாலிவுட்டில் தலைக்காட்டவும் சென்றார். ஹாலிவுர் சீரியஸ், நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ராவும் பாப் பாடகர் நிக் ஜோனஸும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகினர்.

Nick Jonas and Priyanka Chopra Engagement Ring

பிரியங்காவுக்கும், நிக் ஜோனசுக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரங்களில் இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெருக்கத்தை அம்பலப்படுத்தின. மேலும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் இந்த ஆண்டு விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியது.

Priyanka Chopra

காதலருடன் பிரியங்கா சோப்ரா

இந்நிலையில், நேற்று(6.8.18) மும்பை விமான நிலையத்தில் பிரியங்கா சோப்ரா செய்த காரியம் பெரும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு வந்த பிரியங்கா சோப்ரா திடீரென்று செய்தியாளர்கள் கேமராவுடன் இருப்பதை கண்டுக் கொண்டார்.

உடனே, தனது கையில் இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் கழட்டி தனது ஜீன்ஸ் பேண்டிற்குள் வைத்துக் கொண்டார். அதன் பின்பு சாதரணமாக அங்கிருந்த பாதுகாவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கைக் குலுக்கினார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளன.

மேலும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. கேமராவை பார்த்து பிரியங்கா சோப்ரா மோதிரத்தை மறைக்க என்ன காரணம்? எதற்கு நிச்சயதார்த்தம் ஆனதை வெளியில் மறைக்க வேண்டும்? என்று ரசிகர்கள் சில கேள்வி எழுப்பியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close