கீழே விழுந்த புகைப்படக்காரர்... தூக்கிவிட்டு உதவிய ராகுல் காந்தி... வைரலாகும் வீடியோ...

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Rahul Gandhi Helps Photographer Viral Video : நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்கு இன்று ஒடிசா சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.   விமான நிலையத்தில் ராகுல் காந்தியை காண கட்சித் தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் புகைப்படக் கலைஞர்கள் திரண்டிருந்தனர்.

Rahul Gandhi Helps Photographer Viral Video

ஒடிசாவை வந்தடைந்த ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு அருகே வரிசையாக படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அவர் பேசிக் கொண்டே இருக்கும் போது சற்றும் எதிர்பாராத வகையில் , அங்கு குழுமியிருந்த குழுவில் இருந்து புகைப்படக்காரர் திடீரென கீழே விழுந்தார்.
படிக்கட்டுகள் இருந்தால் உருண்டு தலை குப்புற விழுந்துவிட்டார். அவருக்கு உதவி செய்ய அருகில் இருந்தவர்கள் முயற்சி செய்த போது, ராகுலும் படிகளில் இறங்கி ஓடி வந்து அந்த பத்திரிக்கையாளரை தூக்கிவிட்டு உதவினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close