பதவி வேண்டாம் இந்த வாழ்க்கை தான் வேணும்.. மக்களுடன் சேர்ந்து படம் பார்த்த ராகுலின் வைரல் வீடியோ!

ராகுலின் இந்த எளிமைத்தான் அவரை இளைஞர்கள் பலராலும் ரசிக்க வைக்கிறது

rahul gandhi video  : காங்கிரஸ் தலைவர் பதவியை தூக்கி எறிந்து விட்டு மக்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி, சினிமா தியேட்டரில் படம் பார்த்த வீடியோ அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சி தலைவர்கள் தொடர்ந்து பேட்டிகளில் பதிவு செய்து வந்தனர். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்பு சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல் என்பதால் அனைவரின் கவனமும் ராகுல் காந்தி பக்கம் இருந்தது.

ஆனால் தேர்தல் முடிவுகள் அப்படியே எதிர்மறையாக அமைந்தது. மக்களவைத் தேர்தலில் 542 இடங்களில் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். இதற்கிடையில், தேர்தல் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார்.

ராகுலின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு எதிர்வித்தனர். இருந்தபோதும் தனது முடிவில் தெளிவாக இருந்த ராகுல் 2 நாட்களுக்கு தலைவர் பதவியை ராஜினமா செய்தார். தனது டிவிட்டரில் தலைவர் என்ற அடையாளத்தை மாற்றினார்.

இந்நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் ராகுல் டெல்லியில் இருக்கும் திரையரங்குக்கு சென்று பொதுமக்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார். டெல்லியில் இருக்கும் பிவிஆர் சாணக்கியாவில் ஆர்ட்டிகிள் 15 என்ற இந்தி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை ராகுல் நேரில் சென்று மக்களுடன் இணைந்து கண்டுக்களித்தார். இதுக் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதில், ராகுல், தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவருடன் உரையாடிக் கொண்டே, பாப்கார்ன் சாப்பிட்டே படம் பார்க்கிறார். ராகுலின் இந்த எளிமைத்தான் அவரை இளைஞர்கள் பலராலும் ரசிக்க வைக்கிறது என்கின்றனர் இணையவாசிகள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close