நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகையாக அவதாரம் எடுத்துள்ள விஜே ரம்யா, விஜயின் மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே வீட்டை பெருக்கும் டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விஜே ரம்யா வீட்டிலேயே இருந்து வருகிறார். ரம்யா கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தி ரம்யா சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சிலர் வீட்டில் தனிமையாக அடைந்து இருப்பது போர் அடிப்பதாகக் கூறி வெளியே சுற்றச் சென்று போலீசாரின் நடவடிக்கைக்கு ஆளாகி சூடு படுகின்றனர். வீட்டில் தனிமையில் இருப்பது போர் அடிக்கிறது என்றால், விஜே ரம்யா போல, டான்ஸ் ஆடிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்து மகிழ்ச்சியாக இருக்கலாம்.
ரம்யா மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலுக்கு செம க்யூட்டான ஒரு டான்ஸ் ஆடிக்கொண்டு துடைபத்தால் வீட்டை பெருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ரம்யாவின் அம்மா மகிழ்ச்சியான முகத்துடன் படம் பிடித்ததாகவும் அதனால் தனது அம்மாவுக்காக இதுமாதிரி எத்தனை முறை வேண்டுமென்றாலும் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்ட ரம்யா தவறாமல் தினமும், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்து வருவதாகவும், சாக்கு சொல்வதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.