அரிய வீடியோ காட்சி: சர் சி.வி ராமனை கொண்டாடிய ட்விட்டர் வாசிகள்

நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகிலுள்ள  திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார்.

By: November 8, 2020, 6:35:00 PM

1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்ற டாக்டர் சி வி ராமனின் 132 வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.  நோபல் அறக்கட்டளை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கதில், ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசைப் பெறுவதற்காக  வந்த சி.வி ராமனின் அரிய காட்சிகளைப் பகிர்ந்து கொண்டது.  இந்த, வீடியோ தற்போது சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருவது

இந்தியர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இந்த கண்டுபிடிப்பிற்காக அவருக்கு நோபல் பரிசு  வழங்கப்பட்டது.

 

 

 

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகிலுள்ள  திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

 

 

 

 

சி.வி.ராமன் அசாதாரண திறன் கொண்டவர். 15 வயதில் இயற்பியலில் பி. ஏ பட்டப்படிப்பை முடித்தார். 19- வது வயதில், எம்.ஏ பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்

 

 

 

1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.

 

 

இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Rare footage of dr cv raman in stockholm to receive nobel prize creates buzz online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X