Advertisment

பெண்களை பசு மாடுகளாக சித்தரித்து வீடியோ: சர்ச்சையில் பால் உற்பத்தி நிறுவனம்

Korean dairy brand Seoul Milk shows women as cows in ad; apologises later Tamil News: தென்கொரியாவின் பால் உற்பத்தி நிறுவனம், பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Seoul Milk viral video Tamil News: South Korean dairy company shows women as cows in ad

Seoul Milk ad viral video Tamil News: பால் உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது தென்கொரியாவின் 'சியோல் மில்க்’ நிறுவனம். இந்நிறுவனம் தனது விற்பனை நோக்கங்களுக்காக பல விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோ உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சியோல் மில்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த விளம்பர வீடியோவில், பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நபர் காட்டுப்பகுதியில் கேமராவை எடுத்துக்கொண்டு செல்கிறார். அப்போது அங்கு காணப்படும் ஓடையில் ஓடும் நீரை வெள்ளை நிற உடையணிந்த சில பெண்கள் குடிப்பது போன்றும், பிறகு அவர்கள் யோகா செய்வதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்கிறார்.

'இயற்கையை அதன் தூய்மையில் பாதுகாக்கும் ஒரு அழகிய இடத்தில் அவற்றை கேமராவில் படம்பிடிப்பதில் இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றோம். இயற்கையில் இருந்து தூய்மையான நீரை அவர்கள் குடிக்கின்றனர். இயற்கையான உணவுகளையே உட்கொள்கின்றனர். அமைதியான சூழ்நிலையில் அமைதியாக வாழ்கின்றனர். நான் அவர்கள் அருகில் கவனமுடன் செல்ல முயற்சிக்கிறேன்’ என அந்த வீடியோவை பதிவு செய்யும் நபர் கூறுகிறார்.

publive-image

தொடர்ந்து அவர் கிழே கிடக்கும் மரத்துண்டில் தனது காலை வைத்ததால் அது உடைகிறது. அந்த சத்தத்தை கேட்ட அப்பெண்கள் திடீரென பசு மாடுகளாக மாறுகின்றனர். பிறகு தூய்மையான நீர், ஆரோக்கியமான உணவு, 100 சதவிகிதம் சியோல் பால். இயற்கையான சூழ்நிலையில் இருந்து இயற்கையான பால்’ என அந்த விளம்பர படம் முடிகிறது.

இந்நிலையில், வியாபார நோக்கங்களுக்காக பெண்களை இப்படி பசுக்கள் போல் சித்தரித்து காட்சிப்பொருளாக்கி பால் விளம்பரம் செய்திருப்பதாக சியோல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிரான உலக அளவில் கண்டன குரல்கள் எழுந்தது. மேலும், சில பெண்கள் அமைப்பும், தென் கொரிய நாட்டின் சமூக ஆர்வலர்களும் இந்த விளம்பரத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து விளம்பரம் எடுத்ததற்கு சியோல் பால் உற்பத்தி நிறுவனம் தற்போது மன்னிப்புக்கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Video Tamil Viral Video South Korea Milk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment