Advertisment

ஐபிஎல் வின்னர்ஸ் மும்பை தான்.. ஆனா ரசிகர்கள் மனதை ஜெயித்தது நம்ம வாட்சன் தான்பா!

வாட்சன் காலில் 6 தையல்கள் போடப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shane Watson

Shane Watson

Shane Watson : நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் சீசனின் ஃபனல்ஸ் குறித்த பேச்சு தான் எந்த பக்கம் திரும்பினாலும். இறுதிப்போட்டியில் மோதிக் கொண்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் கடைசி நேரம் வரை பரபரப்பாக ஆடி இறுதியில் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ். பட்டத்தை கைப்பற்றியது என்னவோ மும்பை இந்தியன்ஸ் தான். ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் நெஞ்சங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்தது சென்னை அணியின் ஷேன் வாட்சன் தான்.

Advertisment

கிரிக்கெட்டிற்காகவும்,அவரின் ரசிகர்களுக்காவும் அவர் எடுத்த ஈடுப்பாடு மற்றும் முயற்சி ஐபிஎல் ரசிகர்களை மனஉருக செய்துள்ளது. ரத்த சொட்ட சொட்ட வாட்சன் ஆடியது எல்லாம் வேற லெவல் அர்ப்பணிப்பாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தும் சென்னை அணி தோல்வியை தழுவியது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

மும்பை vs சென்னை இறுதிப்போட்டியின் போது நடந்தது என்ன? என்பதை சென்னை அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பதிவிட்ட புகைப்படம் மூலமே அனைவருக்கும் தெரிய வந்தது. அவர் வெளியிட்ட புகைப்படத்தில் வாட்சன் தனது முட்டியில் ரத்த சொட்ட சொட்ட விடாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். மேலும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்தாவது, “ஐபிஎல் பைனலில் வாட்சன் பீல்டிங் செய்யும்போது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயம் ஏற்பட்டதை யாரிடமும் தெரிவிக்காமல் அவர் பேட்டிங் செய்தார். போட்டி முடிந்த பின்னர் வாட்சன் காலில் 6 தையல்கள் போடப்பட்டது “ எனக் கூறினார்.

இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக மாறியது.எந்த பக்கம் திரும்பினாலும் வாட்சன் புகழ் ஒலிக்க தொடங்கியது. ஃபேஸ்புக், ட்விட்டர் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் வாட்சனை கொண்டாடி வருகின்றனர்.

Chennai Super Kings Ipl Finals Shane Watson
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment