முன்னாள் அமைச்சர் என்றும் பாராமல்! வைரலாகும் சசி தரூர் ஓணம் புகைப்படம்

கேரள மக்கள் கடந்த வார இறுதியில் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்தார்கள். சமூக வலைதளங்களில் எங்கு சென்றாலும் “தங்கத் தேரில் ஓணம் வந்தல்லோ” என்று மலையாள மொழி பேசும் மக்களும், கசவு சேலையுடன் சுற்றிய தமிழ் பெண்களும் புகைப்படங்களை பதிவிட்டனர்.

Shashi Tharoor memes take over internet

Shashi Tharoor Onam memes : கேரள மக்கள் கடந்த வார இறுதியில் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்தார்கள். சமூக வலைதளங்களில் எங்கு சென்றாலும் “தங்கத் தேரில் ஓணம் வந்தல்லோ” என்று மலையாள மொழி பேசும் மக்களும், கசவு சேலையுடன் சுற்றிய தமிழ் பெண்களும் புகைப்படங்களை பதிவிட்டனர்.

திருவனந்தபுரம் தொகுதியின் காங்கிரஸ் மக்களவை உறுப்பினராக பணியாற்றும் சசி தரூர் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் உள்ள தன்னுடைய பூர்வீக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அருகில் இருக்கும் எலவஞ்சேரி பகவதி க்‌ஷேத்திரத்திற்கு சென்ற அவர் தேங்காய் உடைத்து பிரார்த்தனை மேற்கொண்டார். அப்போது அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

மஞ்சள் நிற குர்த்தா, பட்டு வேஷ்ட்டி மற்றும் துண்டுடன் அவர் தேங்காய் உடைக்கும் காட்சிகள் மீம் கிரேயட்டர்களுக்கு தொக்காய் கிடைத்த கண்டெண்ட் போல ஆனது. நாட்டிய மேடை துவங்கி, குத்து சண்டை, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரிஸ் என அனைத்திலும் அவரை வைத்து செய்துவிட்டனர் மீம் கிரேயேட்டர்கள்.

இதை கொஞ்சம் கூட அவர் சீரியஸாக எடுத்துக் கொண்டது போல் இல்லை. மாறாக, தனக்கு அதில் மிகவும் பிடித்திருந்த மீம்களை அவரே ஷேர் செய்து மற்ற அனைவரையும் சிரிக்க வைத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shashi tharoor memes take over internet congress mp shares his favourite ones

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com