Advertisment

அந்த மனசு தான் சார் கடவுள்; எல்லையில் சிக்கியவர்களுக்கு உணவு அளித்த சீக்கியர்கள்!

புதிய வகை கொரோனா பரவி வருவதை ஒட்டி இங்கிலாந்து பிரான்ஸ் எல்லைகள் அடைக்கப்பட்டன.

author-image
WebDesk
New Update
அந்த மனசு தான் சார் கடவுள்; எல்லையில் சிக்கியவர்களுக்கு உணவு அளித்த சீக்கியர்கள்!

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உருவாகியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மீண்டும் ஒரு அதிர்வலையையும் பாதுகாப்பு எச்சரிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. புதிய ஊரடங்கால் இங்கிலாந்து - ஃப்ரான்ஸ் எல்லையில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். எல்லையில் தவித்தவர்களுக்கு தேவையான உணவை கல்சா அமைப்பு வழங்கியுள்ளது.

Advertisment

கெண்ட் எல்லைப் பகுதியில் சிக்கிக் கொண்ட அவர்களுக்கு 210 மைல்கள் பயணம் செய்து சீக்கிய தொண்டு அமைப்பான லங்கர் எய்டும் இந்த கடுமையான குளிர் காலத்தில் அவர்களுக்கு தேவையான உணவை வழங்கியுள்ளது. மேலும் குருநானக் குருத்வாரா உறுப்பினர்களும் சைவ உணவை தயாரித்து அவர்களுக்கு வழங்கியுள்ளனர். ட்விட்டரில் வெளியான இந்த செய்தியால் பலரும் உதவி செய்த நபர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Social Media Viral Trending
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment