நீங்கள் ஏன் இன்னும் சிங்கிளாக இருக்கிறீர்கள்? நெட்டிசன்களின் அதகள ட்வீட்டுகள் இதோ

தங்கள் காதலர்/காதலிக்காக நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கையில் சிங்கிளாக இருப்பவர்கள், தானே ராஜா/ராணி என நினைத்துக்கொண்டு உல்லாசமாக வலம் வருவார்கள்.

சிங்கிளாக இருப்பது எல்லா நாட்களிலும் சந்தோஷத்தைத் தான் தரக்கூடும். பலரும் தங்கள் காதலர்/காதலிக்காக மாற்றிக்கொண்டு, அவர்களுக்காக நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கையில் சிங்கிளாக இருப்பவர்கள், தானே ராஜா/ராணி என நினைத்துக்கொண்டு உல்லாசமாக வலம் வருவார்கள். மற்றவர்களிடம் தாங்கள் சிங்கிளாக இருக்கிறோம் எனக்கூறி மார்தட்டிக் கொள்வார்கள்.

ஆனால், பிப்ரவரி 14, காதலர் தினம். இந்த ஒருநாளில் சிங்கிளாக இருப்பவர்கள் சோகமாகத்தான் இருப்பார்கள். காரணம், மற்றவர்கள் இவர்கள் ஏன் இன்னும் சிங்கிளாக இருக்கின்றனர் என்பதற்கான காரணத்தையெல்லாம் அவர்களாகவே ஆராய்ந்து கூறி கேலி செய்வார்கள். தங்கள் ஜோடியுடன் சேர்ந்து சிரித்து மகிழுவார்கள்.

காதலர்கள் மற்ற இடங்களுக்கு ஜோடியாக சுற்றும்போதும், தங்கள் அன்பானவர்களுக்கு பரிசுகள் வாங்கிக்கொடுத்து மகிழும்போதும் சிங்கிள் ராஜா/ராணிக்கள் சற்று ஏக்கமாகவே காணப்படுவது உண்மைதான்.

இந்தாண்டு காதலர் தினத்துக்கு இன்னும் 5 நாட்களே இருக்கின்றன. காதலிப்பவர்கள் தங்களுடைய ஜோடிக்கு பிடித்தமான பரிசுப்பொருட்கள் வாங்க கிளம்பிவிட்டனர்.

ஆனால், நம் நெட்டிசன்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா? சிங்கிளாக இருப்பவர்கள் ஏன் இந்தாண்டும் சிங்கிளாக இருக்கின்றனர் என்பதற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்து மீம்ஸ், ஜிஃப், புகைப்படங்கள் என அசத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவற்றுள், உணவை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளாதது, புரிட்டோஸ் வகை உணவை சத்தமாக சாப்பிடுதல் ஆகியவையும் சிங்கிளாக இருப்பதற்கான காரணம் என கூறி நெட்டிசன்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றனர். நம் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பை வரவழைக்கும் சில #WhyImSingle ட்வீட்டுகள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.

இந்த காரணங்களை எல்லாம் அறிந்துகொண்டு அடுத்த காதலர் தினத்தில் உங்கள் அன்பானவர்களை தேர்ந்தெடுங்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close