Advertisment

நீங்க நல்லா வந்தாலே போதும்... சிவகார்த்தியேகனின் வார்த்தையை கேட்டு கண்கலங்கிய நெல் ஜெயராமன்!

நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நெல் ஜெயராமன் , சிவகார்த்திகேயன் சந்திப்பு

நெல் ஜெயராமன் , சிவகார்த்திகேயன் சந்திப்பு

புற்றுநோய் தாக்குதலால் உயிர் காக்க போராடி வரும், நமது நெல்லை காப்போம் ‘நெல்’ இரா.ஜெயராமனை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கண்கலங்கிய நெல் ஜெயராமன் :

இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தை உருவாக்கியவர் இரா.ஜெயராமன். இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, தமிழக அரசின் விருது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். இவரின் சேவையை உணர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், சேவையாளர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் என பலரும் நேரில் சந்தித்தும், நிதி அளித்தும் உதவி வருவதால் இவருக்கு சிகிச்சை தொடர்கிறது.

சமீபத்தில் நடிகர் கார்த்தி, சூரி ஆகியோர் நெல் ஜெயராமனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் சிவகார்த்திகேயனும் நெல் ஜெயராமனை நேரில் சந்தித்துள்ளார். இதுக்குறித்து இயக்குனர் சரவணன் தனது ட்விட்டர் பக்த்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்" என்றார் நெல்_ஜெயராமன் தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் "நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை" என்றார். ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த பதிலைக் கேட்டு கண்கலங்கியுள்ளார் நெல் ஜெயராமன். இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிவகார்த்தியேகனின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

Sivakarthikeyan Nellai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment