Advertisment

மரத்தில் ஏறிய பாம்பு: குருவியை கவ்விய த்ரில் வீடியோ

ஒரு நல்ல பாம்பு மரத்தில் ஏறி குருவியை கவ்விய த்ரில் வீடியோ சமூக ஊடகங்களில் ஆயிரக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. நீங்களே அந்த பாம்பின் ஆக்ரோஷத்தைப் பாருங்கள், பதறிப்போவீர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
snake climbing tree video, how snakes climb trees, can snakes climb trees, snake climbing video, snake climbing tree, Snake climbing on Coconut tree, viral video, snake viral video, Snake climbing on Coconut tree and catching a bird video

Viral Video: சமூக ஊடகங்களின் காலத்தில் தினமும் நூற்றுக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் வன விலங்குகள் வீடியோ, பாம்பு வீடியோ என்றால் எக்கச்சக்கமாக எகிறி வைரலாகி கலக்குகிறது.

Advertisment

அந்த வகையில், ஒரு நல்ல பாம்பு தென்னை மரத்தில் ஏறி குருவியைப் கவ்விப் பிடித்துக்கொண்டி இறங்கிச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக பாம்புகள் கிளைகள் இல்லாமல் செங்குத்தாக இருக்கும் பனை மரம், தென்னை மரம் போன்ற மரங்களில் ஏற முடியாது என நம்பிக்கை. ஆனால், சில கில்லாடி பாம்புகள் லாவகமாக ஏறி இரையைப் பிடித்துக்கொண்டு அதே போல லாவகமாக இறங்கி வந்துவிடும்.

தற்போது சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஒரு பாம்பு ஒன்று தென்னை மரத்தில் ஏறி, பதறப் பதற ஒரு குருவியைப் பிடித்துக்கொண்டு இறங்கிச் செல்கிறது. பொதுவாக பாம்புகள் தென்னை மரத்தில் ஏற முடியாது என்ற கருத்தை இந்த பாம்பு பொய்யாக்கி உள்ளது. இந்த பாம்பு கிளைகள் இல்லாத தென்னை மரத்தில் ஏறி, மரத்தில் இருந்த ஒரு குருவியை கவ்விப் பிடிக்கிறது. பிறகு, வேகமாக மரத்தில் இருந்து இறங்கிச் செல்கிறது. அதே தென்னை மரத்தில், பாம்பு குருவியைப் பிடித்துச் செல்வதை ஒரு கிளி பதறியபடி பார்க்கிறது.

ஒரு நல்ல பாம்பு மரத்தில் ஏறி குருவியை கவ்விய த்ரில் வீடியோ சமூக ஊடகங்களில் ஆயிரக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. நீங்களே அந்த பாம்பின் ஆக்ரோஷத்தைப் பாருங்கள், பதறிப்போவீர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment