New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/07/82vCABz98rPW0F8kuJLj.jpg)
மூன்று பாம்புகள் இணை சேர்ந்து ஆடும்போது அதில் மேலாதிக்கத்துக்காக பாம்புகள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மூன்று பாம்புகள் இணை சேர்ந்து ஆடும்போது அதில் மேலாதிக்கத்துக்காக பாம்புகள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனிதர்களில் மட்டுமல்ல விலங்குகளிலும் காதலில் மேலாதிக்கத்துக்காக சண்டைகள் நடக்கின்றன. மனிதன் தன்னை பண்பட்டவனாக கூறிக்கொண்டலும், சில நிகழ்வுகளில், சில இடங்களில் அவன் தன்னை ஒரு மோசமான விலங்கு என்பதை அறிவித்துக்கொண்டே இருக்கிறான்.
ஆனால், விலங்குகள் இயல்பாக இருக்கின்றன். சமூக ஊடகங்களின் யுகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வனவிலங்குகள் பற்றிய வீடியோக்கள்தான். மனிதர்களுக்கு வன விலங்குகள் மீது ஒரு பெரிய ஆர்வம் இருந்துகொண்டே இருக்கிறது.
அதே போல, பாம்பு என்றால் மனிதர்களிடம் ஒரு அச்சம் இருக்கிறது. அதே நேரத்தில் பாம்பு மீதான ஒரு கவனம் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில், ஒரு வித்தியாசமான பாம்புகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
It’s really a sight😳
— Susanta Nanda (@susantananda3) April 7, 2025
Fighting for their supremacy… pic.twitter.com/uXbmhSE8wG
பாம்புகள் இணை சேர்ந்து ஆடும்போது, பொதுவாக இரண்டு பாம்புகள் இணைவதைப் சகஜமாக பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால், மூன்று பாம்புகள் இணை சேர்ந்து ஆடும்போது அதில் மேலாதிக்கத்துக்காக பாம்புகள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பட்டப் பகலில், நடுரோட்டில் மூன்று பாம்புகள் பின்னி பிணைந்து இணை சேர்கின்றன. அப்போது பாம்புகள் மேலாதிக்கத்துக்காக சண்டையிடும் காட்சி மிரட்டலாக இருக்கிறது.
இந்த வைரல் வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “இது உண்மையிலேயே ஒரு காட்சி,
அவைகளின் மேலாதிக்கத்திற்காக போராடுகின்றன...” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “வாவ்! அருமையான காட்சி. அவைகள் அங்கே ஒன்றுக்கொன்று கடுமையாகப் போராடுகின்றன.” என்று கூறியுள்ளார்.
மற்றொரு பயனர், “முத்தம் கொடுக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். மூன்றாவது, பயனர், “குவாலியரிலா?” என்று கேட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.