Advertisment

திடீரென்று ட்ரெண்டான #SRMcollegesuicudes... உயிரிழந்த மாணவர்களுக்காக பொங்கி எழுந்த இணையவாசிகள்!

உயிரிழந்த மாணவர்களுக்காக மொத்த இணையவாசிகளும் ஒன்றிணைந்த சம்பவம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live

Tamil Nadu news today live

SRM college suicudes : கடந்த 1 வாரமாக இணையத்தில் தொடர்ந்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் குறித்த குற்றச்சாட்டுக்கள் சமூகவலைத்தளங்களில் அதிகரித்துள்ளன. இதற்கு மிக முக்கியமான காரணம் அடுத்தடுத்து நடந்த மாணவர்களின் தற்கொலைகள் தான்.

Advertisment

சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் காட்டாங்கொளத்தூரில் இயங்கி வரும் கல்லூரியின் விடுதி பொத்தேரியில் அமைந்திருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு இந்த விடுதியில் தங்கியிருந்த 2 மாணவர்கள் 10-வது மற்றும் 2-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர்.

தற்கொலை செய்துக் கொண்ட மாணவர்களில் ஒருவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த அனில் செளத்ரி என்பதும் மற்றொருவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனுப்ரியா பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வந்த மாணவி என்பது தெரிய வந்தது. மாணவர்களின் தற்கொலை விவகாரம், வேகமாக சமூகவலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. சக மாணவர்கள் பலரும் தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் தற்கொலை குறித்து கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை குறித்து மறைமலை நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் மன அழுத்தம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது. இதுக் குறித்து கல்லூரி நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், இன்று காலை ட்விட்டர் வலைப்பக்கத்தில் #SRMcollegesuicudes என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகியது. இந்த ஹாஷ்டடேக்குடன் மாணவர்களின் தற்கொலைக்கு நீதி தேவை எனவும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவர்களுக்காக மொத்த இணையவாசிகளும் ஒன்றிணைந்த சம்பவம் கல்லூரி மாணவர்களை நெகிழ வைத்துள்ளது. ஒரே வாரத்தில் 2 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Students
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment