Advertisment

வீடியோ: மீன்பிடி வலையில் சிக்கிய டால்பின்களை மீட்ட தமிழக மீனவர்கள்

மீட்பு வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்வீட்டர் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil news

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய இரண்டு டால்பின்களை மீனவர்கள் மற்றும் வனத்துறையினர் புதன்கிழமை மீட்டனர். ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு பகிர்ந்த இந்த மனதைக் கவரும் வீடியோ, மீனவர்கள் டால்பின்களில் ஒன்றை வலையில் இருந்து பிரித்து, அதை கடலுக்குள் தள்ளுவதைக் காட்டுகிறது.

Advertisment

இந்த வீடியோவில் உள்ளது இந்தியப் பெருங்கடல் ஹம்ப்பேக் (Indian Ocean humpback) வகையைச் சேர்ந்த டால்பின் இனம் ஆகும், இது தென்னிந்தியாவின் கடற்கரைகளுக்கு அருகில் அடிக்கடி காணப்படுகிறது. இந்த டால்பின்கள் 150 முதல் 200 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருப்பதால் அவற்றை சுமந்து செல்வது பெரும்பாலும் சாத்தியமில்லை.

புதன்கிழமை இந்த மீட்பு வீடியோவை தனது ட்வீட்டர் பகிர்ந்த பகிர்ந்த சுப்ரியா; ராமநாதபுரம் மாவட்டம், கீழ்க்கரை ரேஞ்ச் பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய இரண்டு டால்பின்களை தமிழக வனக் குழுவினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இன்று வெற்றிகரமாக மீட்டு விடுவித்தனர். இந்த உண்மையான ஹீரோக்களை நாங்கள் கவுரவிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

அவரது வீடியோவுக்கு கருத்து தெரிவித்த ட்விட்டர் யூஸர் ஒருவர், “சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும். எந்த தொழிலதிபரும் இதை செய்திருக்க மாட்டார்கள். தமிழக மீனவர்களை கண்டு பெருமையடைகிறேன்’ என்றார்.

மற்றொரு நபர், "தமிழக வனக் குழுவிற்கும் மீனவருக்கும் மிகவும் இனிமையான பாராட்டுகள்" என்றார்.

நவம்பர் 2020 இல், இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் சுமார் 100 பைலட் திமிங்கலங்கள் சிக்கியபோது இலங்கையில் ஒரு பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மீட்புப் பணியில் தன்னார்வத் தொண்டு செய்த பல கிராமவாசிகள், கடற்படை வீரர்கள் மற்றும் போலீஸ் குழுக்கள் இரவு முழுவதும் முயற்சி செய்து கடல் விலங்குகளை மீண்டும் தண்ணீருக்குள் தள்ளியது. எப்படி இவ்வளவு திமிங்கலங்கள் கடற்கரையில் சிக்கின என்பது தெரியவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment