Advertisment

70 ஹேர் பின் வளைவுகள்... தமிழக சாலையின் அபூர்வ போட்டோ... வியந்து பார்க்கும் பிரபலங்கள்!

Tamilnadu Viral Update : நமது பயணம் எப்போதும் சாலை மார்க்கமாகவே உள்ளதால், இந்திய கட்டுமான பணிகளின் அழகையும் அதில் இருக்கும் புத்திகூர்மையை கவனிக்க தவறிவிடுகிறோம்.

author-image
WebDesk
New Update
70 ஹேர் பின் வளைவுகள்... தமிழக சாலையின் அபூர்வ போட்டோ... வியந்து பார்க்கும் பிரபலங்கள்!

Tamil Viral Update : பெரிய மலைகள் மற்றும் இயற்கை எழில்மிகு இடங்கள் இந்தியாவில் பல உள்ளன. இதில் தென்னிந்தியாவில் நாம் இதுவரை கண்டிராத பல அதியங்கள் இயற்கை மற்றும் செயற்கையால் உருவாக்கப்பட்ட இடங்கள் உள்ளன. நமது பயணம் எப்போதும் சாலை மார்க்கமாகவே உள்ளதால், இந்திய கட்டுமான பணிகளின் அழகையும் அதில் இருக்கும் புத்திகூர்மையை கவனிக்க தவறிவிடுகிறோம்.

Advertisment

அந்த வகையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்விட் செய்துள்ள ஒரு புகைப்படம் இந்தியாவின் மிக சிறந்த கட்டுமான பணிக்கும் புத்திசாலிதனத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். இந்த புகைப்படத்தை பார்த்தால் தமிழகத்தில் இதுபோன்ற இடடங்கள் உள்ளதா என்று நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளது.

இந்த பதிவில் உண்மையான ட்வீட்டை நார்வே தூதரும் முன்னாள் அரசியல்வாதியுமான எரிக் சொல்ஹெய்ம் பகிர்ந்துள்ளார். அநத பதிவில்  அவர், “நம்பமுடியாத இந்தியா! 70 தொடர்ச்சியான ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட இந்தியாவின் மிகவும் தைரியமான மலைச் சாலைகளில் ஒன்று. கொல்லிமலைச் சாலை, நாமக்கல், தமிழ்நாடு என்று பதிவிட்டுள்ளார். இந்த ஏரியல் ஷாட் புகைப்படத்தை மஹிந்திரா நிறுவனத்தின்  தலைவரான ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பின்னர் அவர் அதை ரீட்வீட் செய்துள்ளார். இந்த பதிவில்,, “எரிக் என் சொந்த நாட்டைப் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பதை நீங்கள் எனக்கு காட்டியுள்ளீர்கள். இது தனிச்சிறப்பு. இந்தச் சாலையை யார் கட்டினார்கள் என்பதை நான் கண்டுபிடிக்க விரும்புகிறேன், அதன் பிறகு என் காரை மட்டுமே நம்பி என்னை அதில் அழைத்துச் செல்வேன்!” என்று கூறியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா இந்த பதிவை இன்று (ஜனவரி 9) ரீட்வீட் செய்துள்ளார். இந்த பதிவு இதுவரை 12,000 க்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் பல கமெண்ட்களை பெற்றுள்ளது.

இந்த பதிவிற்கு ஒருவர், “இதில் எனது கார் (2015 மாடல்) ஓட்டினேன். இதற்காகவே பிறந்தது போல் ஏறுகிறது. ஏறுவது சிரமமின்றி இருந்தது. நான் கல்ஹட்டி காட் பகுதியில் ஏறி ஊட்டிக்கு சென்றேன், அந்த பகுதி மிகவும் செங்குத்தானது. மீண்டும், கார் வளைவுகளையும் ஏறுதலையும் விரும்புவதாக கூறியுள்ளார்.”

மற்றொருவர் "உண்மையில் நம்பமுடியாதது," என்றும், "நான் 2013 இல் இந்த திருப்பங்களில் பயணம் செய்தேன்," என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். "ஐயா, நீங்கள் போகும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்" என்று ஒருவர் ஆனந்த மகேந்திராவிடம் கேட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரைலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment