Advertisment

பிளாஸ்டிக் பையை முகமூடியாக பயன்படுத்திய காமெடி திருடன்: சிசிடிவி காட்சியை பார்த்து சிரித்த போலீஸ்!

திருடன் ஈஸியாக போலீசாரிடம் சிக்கியுள்ளான். இந்த சிசிடிவி காட்சியை காண்பவருக்கு அவன் காமெடித் திருடனாக காட்சியளித்துள்ளான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிளாஸ்டிக் பையை முகமூடியாக பயன்படுத்திய காமெடி திருடன்: சிசிடிவி காட்சியை பார்த்து சிரித்த போலீஸ்!

கன்னியாகுமரியில் செல்ஃபோன் கடை ஒன்றில் திருடிய திருடன் ஒருவன், போலீசாரால் காமெடி திருடன் என்று செல்லமாக அழைக்கப்பட்டுள்ளான்.

Advertisment

திருடுபவர்களுக்கு எப்போதுமே கிரிமினல் மூளை என்று சொல்பார்கள்.அதற்கு காரணம் அவர்கள் எப்போது திருட்டு தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு பல திட்டங்களை  போடுவார்களாம். எப்படியெல்லாம் திருட்டினால் மாற்றிக் கொள்ள மாட்டோம்,   திருடும் வீட்டில் நாய்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் பிளான் பண்ணி செய்வார்களாம்.

திருடும் நேரத்தில் மாட்டிக் கொண்டால்,  தப்பிக்க  உடலில் எண்ணெய் பூசிக் கொள்வது. இறுக்கமாக முகம் முழுவதும் துணியை கட்டிக் கொண்டு ஆட்களை பயம்புடுத்துவது என இவர்கள் செய்யும் திருட்டில் ஏகப்பட்ட வித்தைகளை கையாளுவார்கள்.

ஆனால். கன்னியாகுமரியில் ஒரு புது திருடன் அவனாகவே, போலீசாரிடம்  மாட்டிக் கொண்ட சம்பவம்  வைரலாக மாறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள செல்ஃபோன் கடை ஒன்றில் திருடன் ஒருவன் திருடன் சென்றுள்ளான். ரூ.47 ஆயிரம் மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன்களை இரவோடு இரவாக திருடி சென்றுள்ளான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.  அந்த காட்சிகளை பார்த்த அடுத்த கணமே குபீர் என்று சிரித்துள்ளனர். காரணம், கடைக்குள் திருட வந்த அவன், முகத்தை மறைக்க வெள்ளை நிற பிளாஸ்டிக்  பயன்படுத்தியுள்ளான்.

விளக்கு வெளிச்சத்தில் வெள்ளை நிறக் கவரை தலையில் மாட்டியிருப்பதால், அவரது முகம் பளிச்சென்று சிசிடிவில் பதிவாகியுள்ளது. இதனால், திருடன் ஈஸியாக போலீசாரிடம் சிக்கியுள்ளான். இந்த  சிசிடிவி காட்சியை காண்பவருக்கு  அவன் காமெடித் திருடனாக காட்சியளித்துள்ளான்.

நன்றி: புதிய தலைமுறை

Cctv Footage
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment