Advertisment

இது இலையா? இல்லை மாயாஜாலமா? அழகான பட்டுப்பூச்சியின் கண்கவர் வீடியோ

அதன் அருகில் சென்றதும் அந்த இலை பட்டாம்பூச்சியாம் மாறும் காட்சிகள் பார்ப்போரை மெய் மறக்க வைக்கிறது.

author-image
WebDesk
New Update
viral video, trending viral video

Tamil Trending news : இயற்கை எத்தனை அதிசயங்களை உள்ளடக்கியது என்பதை நம்மால் நம் வாழ்நாளில் உணர்ந்து கொள்ளவே முடியாது. ஏன் என்றால் பார்க்கும் அனைத்து உயிரினங்களிலும் ஏதோ ஒரு அதிசயக்கத்தக்க ஒரு அம்சம் இருக்கத்தான் செய்கிறது.

Advertisment

பயோக்கான் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர் கிரன் மாஸூம்தார் ஷா ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் காய்ந்த இலையைப் போன்று இருக்கும் பட்டாம்பூச்சி ஒன்று அழகாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன் அருகில் சென்றதும் அந்த இலை பட்டாம்பூச்சியாம் மாறும் காட்சிகள் பார்ப்போரை மெய் மறக்க வைக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட இந்த வீடியோவை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனார். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும். Kallima inachus எனப்படும் Indian Oakleaf பட்டாம்பூச்சி  தேசிய பட்டாம்பூச்சிக்கான தேர்வு நிலையில் உள்ளது. இந்த பட்டாம்பூச்சிக்கு டெட்லீஃப் என்ற பெயரும் இருக்கிறது. இதனை பார்க்கும் போது ஒரு காய்ந்த சருகைப் போன்று இருப்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment