Advertisment

உலகிலேயே விலை உயர்ந்த மீன் இது தான்... ரூ. 72 லட்சத்திற்கு ஏலம் போன க்ரோக்கர்

சில மீன்கள் அதன் ருசியான இறைச்சிக்காக அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் இந்த மீனை அதன் எலும்புகள் மற்றும் தோலுக்காகவும் மக்கள் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Viral news Rare 48-kilo Atlantic croaker sold for Rs 72 lakh in Pakistan

48-kilo Atlantic croaker sold for Rs 72 lakh : பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று மீன் பிடிக்க சென்ற சாஜித் ஹஜி அபபாக்கருக்கு அடித்தது மிகப்பெரிய லாட்டரி டிக்கெட். க்வாதர் கடலில் மீன் பிடிக்க சென்ற அவருக்கு 48 கிலோ எடை கொண்ட அட்லாண்டிக் க்ரோக்கெர் மீன் வலையில் சிக்கியுள்ளது.

Advertisment

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தோல் மற்றும் எலும்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மருத்துவ காரணங்களுக்காக அதிக விலை கொடுத்து வாங்குவோரும் உண்டு. பொதுவாக 1.2 கிலோ எடையே கொண்டிருக்கும் இந்த மீன்கள் அதிக அளவில் இந்த காலக்கட்டத்தில் க்வாதர் கடலில் அதிகம் கிடைக்கும். கடந்தவாரம் ஒருவர் ரூ. 7.8 லட்சத்திற்கு மீனை விற்ற நிலையில் சாஜித் ஹஜி இந்த மீன்களை ரூ. 72 லட்சத்திற்கு விற்றுள்ளார்.

மேலும் படிக்க : நிறம் மாறும் பனிப்பூனைகள்; யூராசியன் லின்க்ஸின் வைரல் வீடியோ

எப்போதும் இல்லாத உயர் விலையாக ரூ. 86.4 லட்சத்திறு ஏலம் நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் பாரம்பரிய சலுகை மற்றும் சிறப்பு கழிவுகள் எல்லாம் போக மீன்களை ரூ. 72 லட்சத்திற்கு அவர் விற்றதாக கூறியுள்ளார்.

சில மீன்கள் அதன் ருசியான இறைச்சிக்காக அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் இந்த மீனை அதன் எலும்புகள் மற்றும் தோலுக்காகவும் மக்கள் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : நியூ கினியில் வாழும் சாக்லேட் நிற தவளைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment