Chinese man uses Lamborghini to barbecue meat : எத்தனையோ சாதனைகள் புரிஞ்சு செய்திகளிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் இளைஞர்களுக்கு மத்தியில் இந்த சீன இளைஞர் வேற ரகம். ஹூனான் மாகாணத்தில் உள்ள சங்ஷா பகுதியில் தன்னுடைய நண்பர்களுடன் கார் பார்க்கிங்கில் அமர்ந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென ஒரு ஆசை வரவும் பார்பிக்யூ கறி உண்ண விரும்பியிருக்கிறார். கிரில்லும் ஸ்ட்வ்வும் இல்லாத காரணத்தால் தன்னுடைய லாம்போகினி காரை பயன்படுத்தி உணவு சமைக்கும் வித்தியாசமான முயற்சியில் ஒரு வேளை பார்த்திருக்கிறார்.
அவருக்கு மட்டும் தான் சமையல் என்பது சித்து வேலை என்று தெரிந்திருக்கிறது. வாகனத்தின் எஸ்ஹாஸ்டரில் இருந்து வரும் நெருப்பை பயன்படுத்தி இறைச்சியை சூடுபடுத்த துவங்கியிருக்கிறார் அவர். இந்த அரிதான ஐடியா அவருக்கு மட்டுமே தோன்றியிருப்பதாக நினைத்து சிரித்தபடியே மேலும் மேலும் அந்த இறைச்சியை சூடாக்க, சூடான லாம்போகினி எஞ்சின் தன்னுடைய வேலையை காட்டிவிட்டது. மேலும் கம்பார்ட்மெண்ட்டில் இருந்து புகையை கக்க, கூலண்ட் ஆய்ல் கசிந்து அந்த பகுதி முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தது.
பயங்கரமான புகை எழும்பவும் தான் தன்னுடைய காருக்கு அவர் மங்களம் பாடியிருப்பது நினைவிற்கே வந்தது. லாம்போகினி அவென்டேட்டர் விலை இந்திய ரூபாயில் ரூ. 5 கோடிக்கும் மேலே. இவர் பார்த்து வைத்த காரியத்திற்கு ரீப்பேர் பார்த்த பணம் மட்டும் 57 லட்சமாம். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil