Tamil viral news trending video : கூர்மையான பொருட்களை பார்த்தாலோ, அதனை அருகில் கொண்டுவந்தாலோ அச்சம் தொற்றிக் கொள்ளும் அனுபவம் இருக்கிறதா? சிலருக்கு ஊசிகள் மற்றும் ஷார்ப்பான பொருட்களை பார்த்தால் அச்சத்தில் வேர்த்துக் கொட்டும் பழக்கம் இருக்கும். அப்படியான ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டால் என்ன ஆகும் என்று பாருங்கள்.
ப்ரேசிலில் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மகுய்லா ஜூனியர் என்று அழைக்கப்படும் அவர் பீச் பாய்ண்ட் பகுதியில் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொள்ள போன நேரத்தில் அதிகமாக மூச்சு வாங்கி, வேர்த்துக் கொட்டி, தடுப்பூசி போடும் நபர்களை ஒரு வழியாக்கிவிட்டார்.
அருகில் இருக்கும் செவிலியர் அவரை எவ்வளவோ சமாதனப்படுத்த முயன்றும் இந்த அச்சத்தில் உறைந்த அவர், கொரோனா தடுப்பூசி போட்டதும் மயங்கி கீழே விழுந்துவிட்டார். அவரின் பலவீனம் என்ன என்பதை நன்றாக உணர்ந்த அவருடைய துணை இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மயங்கி அவர் நினைவு திரும்பிய பிறகு அவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கி பின்பு அங்கிருந்து அனுப்பி வைத்தனர் மருத்துவ குழுவினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil