Advertisment

இயற்கையின் அதிசயம்! இரட்டை தலை ஆமை கண்டெடுப்பு - வியக்கும் ஆய்வாளர்கள் (வீடியோ)

Viral Video: தற்போதைக்கு ஆமைக் குஞ்சின் இரு தலைகளும் உணவு உட்கொண்டு வருகிறது. எனினும், இந்தக் குட்டி தொடர்ந்து உயிர் வாழ்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil viral video, viral video, latest tamil viral video, latest viral video, tamil viral, வைரல் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, social media viral

tamil viral video, viral video, latest tamil viral video, latest viral video, tamil viral, வைரல் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, social media viral

Tamil Viral Video: இரண்டு தலை கொண்ட ஆமை பார்த்து இருக்கீங்களா? குறைந்தபட்சம் கேள்விப்பட்டு இருக்கீங்களா? ஆம்! அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், இரண்டு தலைகள் கொண்ட் ஆமைக் குஞ்சு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இது The Virginia Living Museum இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த மியூசியம் தங்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஆமைக் குஞ்சு பற்றிய வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

Advertisment

இதைப் போன்று இரண்டு தலைகள் கொண்டு பிறக்கும் உயிரினம் Polycephaly என்று அழைக்கப்படுகிறது. பாலூட்டி உயிரினங்களில் இதைப் போன்று இரட்டைத் தலை கொண்டு குட்டிகள் பிறப்பது அரிதாகவே நடக்கும் என்றும், சில நேரங்களில் அதற்கான சாத்தியங்கள் இருக்கும் என்றும் கூறுகிறது The Virginia Living Museum.

காண்டாமிருகத்தை விரட்ட கம்பு சுத்தும் யானை : யெப்பா இது நல்ல கதையா இருக்கே!

தற்போதைக்கு ஆமைக் குஞ்சின் இரு தலைகளும் உணவு உட்கொண்டு வருகிறது. எனினும், இந்தக் குட்டி தொடர்ந்து உயிர் வாழ்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது.

“மிகச் சிறந்த மருத்துவ சேவை செய்தாலும் இந்த ஆமைக் குஞ்சு தொடர்ந்து உயிர் வாழ்வது கடினம்தான்,” என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தோசை மாவு எப்போது தோசை பேட்ஸ்மேன் ஆனது? இந்(தி)த மொழி பெயர்ப்புக்கு யார் தான் காரணம்?

இரண்டு தலைகளும் உடலின் அசைவுகளை கட்டுப்படுத்த முயல்வதால் நடப்பது, நீச்சல் அடிப்பது உள்ளிட்ட அடிப்படை விஷயங்களைச் செய்வது கூட கடினம்தான். உதாரணத்திற்கு இடது பக்கம் உள்ள தலை இடது கால்களை கட்டுப்படுத்துகின்றன. வலது தலை, வலது கால்களை கட்டுப்படுத்துகின்றன. தலை வளர வளர, உடலைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று இரு தலைகளும் ஒன்றிணைந்து முடிவு செய்ய வேண்டும். ஒத்துழைப்பு இல்லையென்றால் சாதாரண விஷயங்களை செய்வது கூட சிரமமாகிவிடும் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment