Advertisment

ஆட்டோ ஓட்டிச் செல்லும் தமிழகத்தின் கோடிஸ்வர எம்.பி: வைரல் வீடியோ

Tamilnadu News Update : விஜய்வசந்த ஆட்டோ ஓட்டிச் சென்றது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
ஆட்டோ ஓட்டிச் செல்லும் தமிழகத்தின் கோடிஸ்வர எம்.பி: வைரல் வீடியோ

MP Vijay Vasanth Driving Auto Viral Update : கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்பியான நடிகர் விஜய் வசந்த அப்பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு திடலை சீரமைக்கும் பணிக்காக ஆட்டோ ஓட்டிய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக இருந்த வசந்தகுமார் கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் இறந்த வசந்தகுமாரின் மகனான விஜய் வசந்த தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில வீழ்த்தி வெற்றி பெற்றார்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்காண்ட அவர், நாடாளுமன்றத்தில் தமிழில் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியுடன் இணைந்து பங்கேற்றார். அந்த வகையில் தற்போது இவர் தனது தொகுதியில் உள்ள ஒரு விளையாட்டு திடலை சீரமைக்கும் நோக்கில் ஆட்டோ ஓட்டி வருகிறார்

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி பகுதியில் உள்ள விளையாட்டு திடலை சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் எம்பி வசந்தகுமாரிடம் அப்பகுதிய இளைஞர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் திடீரென எம்பி வசந்தகுமார் இறந்துவிட்ட நிலையில், விளையாட்டு திடலை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ள அவரது மகனும் தற்போதைய எம்பியுமான விஜய் வசந்த் அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த பணிக்காக அவர் ஆட்டோ ஓட்டி சென்ற அவர், ஜே.சி.பி எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்ட நிலையில், விஜய்வசந்த ஆட்டோ ஓட்டிச் சென்றது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த எம்பி. விஜய்வசந்த் அதில் தனது அசையும் சொத்தின் மதிக்கு ரூ 40,44,93,256 என்றும், ரூ 11,83,80,000 ஆசையா சொத்துக்களும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது மனைவி பெயரில், ரூ60,37,460 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், ரூ 20 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளது என்று கூறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் கோடீஸ்வர எம்பி தற்போது ஆட்டோ ஓட்டுகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Vijay Vasanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment