Advertisment

குடிகார தந்தை, பாலியல் தொழிலில் தள்ளிவிடப்பட்ட தாய், கொடூர கணவர்: மீண்டது எப்படி?

தினமும் குடித்துவிட்டு தன்னை அடிப்பதையே வழக்கமாக கொண்ட தந்தை. தந்தையின் வற்புறுத்தலால் பாலியல் தொழிலில் கட்டாயமாக தள்ளி விடப்பட்ட தாய்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
humans of bombay, self confidence, motherhood, children, sex work, sex worker, Nutan

தினமும் குடித்துவிட்டு தன்னை அடிப்பதையே வழக்கமாக கொண்ட தந்தை. தந்தையின் வற்புறுத்தலால் பாலியல் தொழிலில் கட்டாயமாக தள்ளி விடப்பட்ட தாய். தந்தையை போலவே கொடுமைக்காரரான கணவர். இப்படி, சிறு வயது முதல் பெரியவளாகி திருமணமான பின்பும், குடும்பத்தில் பல இன்னல்களை தாங்கிக் கொண்டு வளர்ந்தவர் தான் மும்பையை சேர்ந்த நூட்டன். அனுபவிக்க இயலாத கஷ்டங்களுக்கு பழக்கப்பட்ட நூட்டன் ஒருநாள் அதிலிருந்தெல்லாம் மீண்டு, தனியாளாக தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார் இப்போது. அவரது தன்னம்பிக்கை நிறைந்த கதையை ’ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ (Humans of Bombay) என்ற முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் நூட்டன்.

Advertisment

நூட்டன் சிறு குழந்தையாக இருக்கும்போது, அவருடைய தந்தையும், தாயும் பிழைப்பு நடத்தி கிராமத்தில் இருக்கும் நூட்டனுக்கும், அவருடன் பிறந்தவர்களுக்கும் உணவளித்தனர். நூட்டனுக்கு 10 வயதாக இருக்கும் போதுதான், மும்பைக்கு வந்து தன் தாயுடனேயே இருக்க துவங்கினார். அப்போதுதான் குடிக்கு அடிமையான தனது தந்தை, சோனாபூரில் பாலியல் தொழிலுக்கு பெயர்போன இடத்தில் தன் தாயை அத்தொழிலுக்கு தள்ளிவிட்டு விட்டார் என்பது. அதன்பின், 13 வயதில் நூட்டனுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தந்தை தான் கொடூரமானவர் என்றிருந்த நூட்டனுக்கு கணவரும் கொடூரமானவராகவே வாய்த்தார். தினமும் குடித்துவிட்டு பிள்ளைகளையும், மனைவியையும் அடிப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார் நூட்டனின் கணவர்.

ஒருநாள் தாயுடன் சேர்ந்து தானும் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என அவரது கணவர் எண்ணியதை உணர்ந்தார் நூட்டன். ஆனால், எக்காரணத்துக் கொண்டும் அத்தொழிலில் சென்றுவிடவில்லை. தன் கணவரின் அடியை தாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்தார்.

அதன்பின், ஒருநாள் தன் கணவரின் கொடுமையை நூட்டனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. தன் குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பித்து தாயிடம் அடைக்கலம் தேடினார். ஆனால், “எக்காரணத்துக் கொண்டும் இங்கே மீண்டும் வந்துவிடாதே”, எனக்கூறி ஒரு நள்ளிரவில் அங்கிருந்து நூட்டனையும் குழந்தைகளையும் துரத்தினார் அவரது அம்மா.

பின், இரவில் குழந்தைகளை ரயில் நிலைய மேசையில் தூங்க வைத்தார். குழந்தைகளுடன் நள்ளிரவில் எங்கே செல்வது, வாழ்க்கையை எங்கேயிருந்து துவங்குவது என யோசித்துக் கொண்டே இருந்தார்.

அப்போதுதான், என்றோ ஒருநாள் தன் வீட்டுக்கு வந்து “எந்த உதவி என்றாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்”, என பூர்ணதா என்ற அரசு சாரா நிறுவனத்தின் ஞாபகம் வந்தது. எப்படியோ அவர்களை தொடர்பு கொண்டார். பின்பு, அவரையும், குழந்தைகளையும் மீட்ட அந்த அமைப்பு, நூட்டனுக்கு தையல் கலையை சொல்லிக் கொடுத்தது.

அங்கிருந்து தன் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் துவங்கிய நூட்டனுக்கு, எதிர்காலத்தில் ஆடை வடிவமைப்பில் பெரிய ஆளாகி, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே லட்சியம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment