Advertisment

"நான் துணியாக இருந்தாலும் நிர்வாணமாக உணருகிறேன் ": தேசியகொடிக்கு குரல் கொடுத்த கவிஞர்

உண்மையில் இன்றைய நிலையில் தேசியக்கொடி பேசினால் இப்படித்தான் இருக்குமா? என்ற கேள்வியையும், அதற்கு 'ஆம்' என்ற பதிலையும் நாமே அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
"நான் துணியாக இருந்தாலும் நிர்வாணமாக உணருகிறேன் ": தேசியகொடிக்கு குரல் கொடுத்த கவிஞர்

இந்திய தேசியக்கொடிக்கு பலர் மதச்சாயம் பூச்சிவிட்டனர். அதிலுள்ள நிறங்கள் குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமானதாக கட்டமைக்கப்பட்டு விட்டது. கலவரங்களின் பெயராலும், போரின் பெயராலும், எல்லைகளின் பெயராலும், மதம், சாதி இன்ன பிறவற்றின் பெயராலும் இந்திய தேசியக்கொடி தினம் தினம் அவமானப்படுத்தப்படுகிறது. தினந்தோறும் தீயில் இட்டு எரிக்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், தேசியக்கொடிக்கு என குறிப்பிட்ட குரல் இருந்து அது பேசினால் எப்படியிருக்கும் என நவல்தீப் சிங் என்பவர் கவிதையாக எழுதி கற்பனையாக்கி இருக்கிறார். அது இணையத்தில் அபலரின் மனங்களை வென்றுள்ளது. உண்மையில் இன்றைய நிலையில் தேசியக்கொடி பேசினால் இப்படித்தான் இருக்குமா? என்ற கேள்வியையும், அதற்கு 'ஆம்' என்ற பதிலையும் நாமே அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

'திராங்கா' என்ற பெயரில் அவர் தேசியக்கொடிக்கு குரல் கொடுத்திருக்கிறார். மும்பையில் உள்ள துனிங் ஃபோர்க் என்ற இடத்தில், இந்தாண்டின் ஆரம்பத்தில் ஒரு நிகழ்ச்சியில் இதனை நிகழ்த்திக் காட்டினார். இந்தி மொழியில் அவர் பேசியுள்ளார்.

தேசிய கொடிக்கு குரல் இருந்தால் இதைத்தான் அது பேசியிருக்கும்.

"அலைந்து திரியும் மனங்களை நான் அடிக்கடி சந்திக்கிறேன். அவை இன்னும் இடுகாடுகளில் உறங்கவில்லை. அவை கலவரங்களில் நீங்கள் எரித்த மனிதர்களின் ஆன்மாக்கள். உங்களில் சிலர் என்னிடம் உள்ள காவியை குறித்து மட்டுமே பேசுகின்றனர். சிலர் என்னிடம் உள்ள பசுமையை. என்னை தினம் தினம் கலவரங்களில் எரிக்கிறீர்கள். நான் சுதந்திரத்தின் அடையாளம். இன்னும் நான் பலரது மனங்களில் வாழ்கிறேன். எனது நிறங்கள் அமைதி, தைரியம், சுதந்திரம். நான் ஒரு துணியாக இருந்தாலும் நிர்வாணமாக்கப்படுகிறேன்."

இந்த வீடியோவைப் பார்த்தால் உண்மையில் தேசியக்கொடி நம்மிடம் பேசினால் இதைத்தான் பேசியிருக்கும் என்பதை நீங்கள் உணருவீர்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment