Advertisment

சல்மான் கானிற்கு ஜாமீன்.... என்ன நடந்தது ட்விட்டரில்???

ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சல்மான் கானிற்கு ஜாமீன்....  என்ன நடந்தது ட்விட்டரில்???

இன்றைய தினம்  ட்விட்டர் வலைப்பக்கத்தில் சல்மான்கானும், அவரது ரசிகர்களுமே  ஆக்கரமித்தனர்.  நேற்று முன் தினம் அரிதான மான் வகையை வேட்டையாடிய வழக்கில்  பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டன.

Advertisment

அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரின் தீவிர ரசிகர்கள்  ட்விட்டரில் குரல் எழுப்ப ஆரம்பித்தன.

1. #welovesalmankhan

20 ஆண்டுகள்   நடந்த இந்த வழக்கில்  ஜோத்பூர் கீழ் கோர்ட்டு சல்மான்கானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து சல்மான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு சிறையில் 106 ம் எண் அறை ஒதுக்கப்பட்டது. இந்த அறையில் தான் சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவும் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

அவருடன் சல்மான்கானும் இருக்கிறார்.  இந்த தகவல் வெளிவந்த உடனே அவரின் தீவிர ரசிகர்கள்  உடனடியாக சல்மான்கானை விடுவிக்க வேண்டும் என்று #welovesalmankhan என்ற ஷாஸ்டேக்கை பரப்ப தொடங்கினர்.

இந்த ஹாஸ்டேக்கில், சிறைக்கு சென்றாலும் எங்களின் ஹீரோ சல்மான்கான் என்றும், ஆதரவற்றோருக்கு அவர் செய்யும் உதவிகள்,  அவர் நடத்தும் கருணை இல்லங்கள் குறித்தும்  ரசிகர்கள் அதிகளவில் பகிர ஆரம்பித்தனர்.

2. #WorldHealthDay

உலகமெங்கும் இன்று சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆரம்ப நாளான ஏப்ரல் 7-ஆம் தேதி, உலக ஆரோக்கிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளைக்கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

3. #SathishSivalingam

காமன்வெல்த் போட்டியில், தமிழகத்தின் சதீஷ்குமார் சிவலிங்கம் பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

4. #Bail

நடிகர் சல்மான்கானுக்கு மான் வேட்டையாடிய வழக்கில் ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் நீதிமன்றம் . சல்மான் கான் சிறையில் தான் இருக்க வேண்டும் என்று சாட்சியங்களின் வாக்குமூலங்களை முன் வைத்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சல்மான் கான் வழக்கறிஞர், சாட்சியம் நம்பத்தகுந்ததாக இல்லை என்று வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதி சல்மான்கானிற்கு ஜாமீன் வழங்கினார். ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment